எதிர்நீச்சல் சீரியலில் ஒரு கேரக்டரே க்ளோஸ்? காரணம் அந்த நடிகைதானாம்!

கோலங்கள் என்ற மெகாஹிட் சீரியலை கொடுத்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடரில் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

கோலங்கள் என்ற மெகாஹிட் சீரியலை கொடுத்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடரில் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ethirneechal Serial

எதிர்நீச்சல் சீரியல்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு கேரக்டரை நீக்கியுள்ளதாக வெளியாகியுளள் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

கடந்த 2022-ம் ஆண்டு தனது ஒளிபரப்பை தொடங்கியது முதல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் எதிர்நீச்சல், ஆணாதிக்கத்தின் உச்சமாக இருக்கும் ஒரு குடும்பத்திற்கு வரும் 4 மருமகள்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கோலங்கள் என்ற மெகாஹிட் சீரியலை கொடுத்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடரில் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். டிஆர்ப ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் எதிர்நீச்சல் மற்ற சீரியல்களுக்கு போட்டியாக அதிக புள்ளிகளையம் பெற்று வரும் நிலையில், தற்போது இந்த சீரியவலில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல் குடும்பத்தின் கடைசி மருமகள் ஜனனி கேரக்டரில் மாமன் மகளாக வாசுகி என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை வைஷ்ணவி, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுவசந்தம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எதிர்நீச்சல் கதைக்கு இவர் கேரக்டர் தேவையில்லாத ஒன்று என்பதால் அவரை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: