New Update
/indian-express-tamil/media/media_files/QOeSN7BbzKDskK9XnsH2.jpg)
சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணன்
தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வரும் காயத்ரி, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணன்
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பெண் அடிமைத்தனம் குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் ஜான்சி ராணி என்ற கேரக்டரில் நடித்து அதகளம் செய்து வருபவர் நடிகை காயத்ரி.
இந்த சீரியல் மூலம் பிரபலமான இவர், ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அயலி வெப் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த தொடரில் காயத்ரியின் நடிப்பு பலராலுமு் பாராட்டப்பட்ட நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்மெண்ட் குறித்து நடிகை காயத்ரி பேசியது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வரும் காயத்ரி, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் அந்த வகையில், தற்போது காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பககத்தில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இணயைத்தில் வைரலாகி வருகிறது.
கண்ணாலே மிய்யா மிய்யா பாடலுக்கு நடிகை யாத்ரி அட்டகாசமாக டான்ஸ் ஆடி உள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இதில் ஒரு சிலர் இந்தம்மா ஏய்.. குணசேகரன் வீட்டு சம்பந்தி இப்படி ஆட்டம் போடலாமா? என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.