Advertisment

எதிர்நீச்சல் ஆதி குணசேகரனாக பிரபல வில்லன் நடிகர்? சன் டி.வி பேச்சுவார்த்தை

எதிர்நீச்சல் சீரியல் மூலம் சோசியல் மீடியாவில் முக்கிய பிரபலமாக உருவெடுத்த மாரிமுத்து வடிவேலுக்கு அடுத்து பெரிய மீம்ஸ் மெட்டீரியலாக மாறினார்.

author-image
WebDesk
Sep 10, 2023 14:04 IST
Maarimuthu Ethirn

எதிர்நீச்சல் மாரிமுத்து

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து மரணமடைந்ததை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரணாக நடிக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என்று நடிகரும் எழுத்தாளருமான வேலா ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என பல படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் மாரிமுத்துவுக்கு சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் தான் திருப்புமுனையாக அமைந்தது. ஆதி குணசேகரனாக இந்த சீரியலில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஏய் இந்தாமா என்று இவர் பேசும் டைலாக் பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது.

சோசியல் மீடியாவில் முக்கிய பிரபலமாக உருவெடுத்த மாரிமுத்து வடிவேலுக்கு அடுத்து பெரிய மீம்ஸ் மெட்டீரியலாக உருவெத்தார். திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பெயரும் புகழும் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு கிடைத்து. அதேபோல் எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்த அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங்கிற்கு முக்கிய காரணம் மாரித்து தான். அதே போல் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லன் வர்மாவின் ரைட்ஹேண்டாக நடித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியலில் டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்துவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் தனது காரை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆக காரில் இருந்து இறங்கும்போதே மரணமடைந்துள்ளார். அவரது மரணம் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Marimuthu Velaramoorthi

நேற்று மாரிமுத்துவின் உடல் தேனி மாவட்டத்தில் அவரின் சொந்த கிராமத்திவ் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே எதிர்நீச்சல் சீரியலின் முதுகெலும்பாக இருந்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மரணமடைந்த நிலையில், அடுத்து ஆதி குணசேகரனாக நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சீரியல் குழு நடிகர் வேலா ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நடிகரும் எழுத்தளருமான வேலா ராமமூர்த்தி கூறுகையில், சமீபத்தில் நானும் மாரிமுத்துவும் ஒரு படத்தில் அண்ணன், தம்பியாக நடித்தோம். எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடிக்க வைப்பது குறித்து சேனல் தரப்பில் இருந்து பேசினார்கள். ஆனால் தற்போது நான் சினிமாவில் பிசியாக இருப்பதால் சீரியலில் நடிக்க நேரம் ஒதுக்க முடியுமானு தெரியல. சீரியலில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பது நிஜம் தான். ஆனா நான் இன்னும் அதுபற்றி எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment