சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் யூனிவர்ஸ் செய்வோம் என்பது போல் எதிர்நீச்சல் சீரியலில் ஏற்கனவே முடிந்துவிட்ட ரோஜா சீரியலின் நாயகன் அர்ஜூன் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இல்லத்தரசிகள் மட்டுமே தங்களது பொழுதுபோக்கிற்காக சீரியல் பார்த்து வந்த காலம்போய் தற்போது டிவி சீரியல்கள் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒரு சில சீரியல்களில் திரைக்கதையும் இணையத்தின் பயன்பாடு அதிகரிப்புதான். அந்த வகையில் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் சீரியலாக மாறியுள்ளது எதிர்நீச்சல்.
ஒளிபரப்பு தொடங்கியது முதல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் பிரபல நடிகர் மாரிமுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்து்து வருகிறார். தற்போது சீரியலில் ஆதி குணசேகரனின் அப்பத்தா பட்டம்மாளின் சொத்துக்களில் 40 சதவீதம் ஜீவானந்தம் பெயருக்கு மாறிவிட்டது. இதனால் குணசேகரன் ஜீவானந்தம் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
ஒரு பக்கம் சொத்து கையைவிட்டு போய்விட்டதே என்று இருக்கும் குணசேகரன், இன்னொரு பக்கம் இந்த ஜீவாநந்தம் யார் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜீவானந்தம் தொடர்ச்சியாக குணசேகரனுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதில் முதல் நாளே குணசேகரனை கம்பேனியில் இருந்து வெளியில் தூக்கிப்போட்ட ஜீவானந்தம் துப்பாக்கியை காட்டி குணசேகரனை மிரட்டிவிட்டார்.
இந்த பிரச்சனை குறித்து போலீசில் சொல்ல போனால் அங்கும் ஜீவானந்தம் இவர்களுக்கு முன் இருக்கிறார். இதனிடையே இன்றைய ப்ரமோவில், குணசேகரனின் ஆடிட்டர் வந்து புது விஷயத்தை சொல்ல, குணசேகரன் நெஞ்சுவலியால் துடிக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த புகைப்படத்தில் நீதிமன்ற குண்டில் நிற்கும் குணசேரகனுக்கு ஆதரவாக வாதாட சின்னத்திரையில் ஏற்கனவே முடிந்துவிட்ட ரோஜா சீரியலின் நாயகன் அர்ஜூன் குணசேகரனுக்கு ஆதரவாக வழக்கறிஞர் வேடத்தில் களமிறங்கியுள்ளார். இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் ரோஜா சீரியலில் அர்ஜூன் கேரக்டரில் நடித்து வந்த சுப்பு சூரியன் தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் நிலையில், அவர் எப்படி மீண்டும் சன்டிவி சீரியலுக்கு வருவார் என்று கூறி வரும் ரசிகர்கள் உண்மையில் இப்படி அர்ஜுன் குணசேகரனுக்காக வாதாடினால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“