New Update
/
சன்டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல், கடந்த ஜூன் 8-ந் தேதி முடிவடைந்த நிலையில், இந்த சீரியலின் தெலுங்கு பதிப்பு இந்த வாரம் முடிந்துள்ளது. ஆனால் தமிழை விட முற்றிலும் மாறுபட்ட க்ளைமேக்ஸூடன் முடிந்துள்ளது.
சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார்போல் அவ்வப்போது புதிய சீரியல்களை ஒளிபரப்புவதும், பழைய சீரியல்களை முடிப்பதும், டிவி நிர்வாகம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த சீரியல் தான் எதிர்நீச்சல்.
கோலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் நடிகை கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில், வில்லன் கேரக்டரில் பிரபல நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். இவர் இருந்தவரை எதிர்நீச்சல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்தது.
ஒரு கட்டத்தில் மாரிமுத்து இறந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக வந்த வேல ராமமூர்த்தி, மாரிமுத்து இடத்தை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலின் க்ளைமேக்ஸுல், வில்லன் ஆதி குணசேகரன் கேரக்டர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு ஜெயிலுக்கு போவது போல் காட்டிருப்பார்கள்.
அதேபோல் இடையில் திருந்தி மனைவிக்கு மரியாதை செய்யும் கணவன்களாக மாறிய ஆதி குணசேரகரனின் தம்பிகள், இறுதியில் அண்ணன் ஜெயிலுக்கு போவதை நினைத்து வருத்தப்படும் வகையில் அவர்கள் வில்லன்களாக மாறுவது போன்று காட்டப்பட்டிருக்கும். ஆனால் தெலுங்கு எதிர்நீச்சல் க்ளைமேக்ஸில்,,தம்பிகள் அனைவரும் மனைவியின் கனவுக்கு துணை நிற்கும் கணவன்களாகவும் காட்டப்பட்டிருந்தனர். மேலும் வீட்டு பெண்கள் வேலைக்கு போகும்போது, கணவன் மற்றும் மாமியார் வழியனுப்பி வைப்பது போல் காட்சியமைக்கப்பட்டிருந்தது.
இந்த க்ளைமேக்ஸ்க்கு ரசிகர்கள் மத்தியில், பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிலையில், தமிழ் க்ளைமேக்ஸ் குறித்து விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.