Advertisment

விறுவிறுப்பாகும் எதிர்நீச்சல்... விரைவில் நேர மாற்றம் : காரணம் என்ன?

எதிர்நீச்சல் சீரியலில், வேல ராமமூர்த்தி, கனிகா, பிரியதர்ஷினி, கமலேஷ் சத்தியபிரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Ethirneechal Guna

எதிர்நீச்சல் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் சன். டி.வி சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது புதிய சீரியல் ஒளிபரப்பாவதும், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும் தொடர்ந்து வரகிறது. அதேபோல், புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகும்போது, பழைய சீரியல்கள் மற்றும் முக்கிய சீரியல்களின் ஒளிபரப்பும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நேர மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் உள்ளிட்ட பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள எதிர்நீச்சல் சீரியலில், வேல ராமமூர்த்தி, கனிகா, பிரியதர்ஷினி, கமலேஷ் சத்தியபிரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கோலங்கள் சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி நடித்து வருகிறார். இதில் வேல ராமமூர்த்தி நடித்து வரும் குணசேகரன் கேரக்டரில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இவர் வீட்டு பெண்கள், சுயமாக சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவது பிடிக்காத குணசேகரன் அவர்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகளை கொடுத்து வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விரைவில் ஒளிபரப்பு நேர மாற்றத்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அரைமணி நேரம் அதிகமாக இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில், வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் தீவிர ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment