தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல் எதிர்நீச்சல். படிக்காத ஆணாதிக்கம் அதிகம் உள்ள ஒரு குடும்பத்திற்கு திருமணமாகி வரும் 4 படித்த மருமகள்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஆணாதிக்கத்தின் உச்சக்கட்ட கேரக்டரான ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து.
எதிர்நீச்சல் சீரியல் இதுவரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதற்கு இவர் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய தூணாக இரந்த மாரிமுத்து ஏய் இந்தாமா என்று சொல்லும் வசனங்கள் ட்ரோல் மெட்டீரியலாக இன்றும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஆர்பியில் இதுவரை எந்த சீரியலும் ட்ச் பண்ணாத புள்ளிகளையும் பெற்றது எதிர்நீச்சல்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலின் டப்பிங்கில் இருந்த நடிகர் மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த குணசேகரன் யார் என்ற கேள்வியையும் எழுப்பியது. இந்த கேரக்டருக்கு நடிகர் வேல ராமமூர்த்தி மற்றும் பசுபதி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்ட்டது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஆதி குணசேகரன் கேரக்டர் இல்லாமல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதே சமயம் மாரிமுத்து இல்லை என்றாலும் இயக்குனர் திருச்செல்வம் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுகொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய ஆதாரமாக மாரிமுத்து இல்லாத நிலையிலும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 10.79 புள்ளிகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது மாரிமுத்துவின் பழைய காட்சிகள் சீரியலில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“