கடைசி ஆக்ஷன் கட்சி : முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல் : கதிர் வீடியோ வைரல்!

அண்ணன் குணசேகரனுக்கு ஆதரவாக இருந்த தம்பி கதிர், ஞானம் ஆகிய இருவரும் தற்போது அண்ணனுக்கு எதிராக திரும்பியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணன் குணசேகரனுக்கு ஆதரவாக இருந்த தம்பி கதிர், ஞானம் ஆகிய இருவரும் தற்போது அண்ணனுக்கு எதிராக திரும்பியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ethirna

எதிர்நீச்சல் சீரியல்

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில்தான் படிக்கவில்லை என்றாலும்படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.

இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கொடூர வில்லனாக ஆணாதிக்கம் படைத்த மனிதனாக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர்தனது மகள் மற்றும் மனைவிக்கே துரோகம் செய்யும் கொடூர மனம் படைத்தவராக வருகிறார். இதில் கடந்த சில வாரங்களாக தர்ஷினி கடத்தல் தொடர்பான எபிசோடுகள் அரங்கேறி வந்த நிலையில்தற்போது அவரது திருமணம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் அண்ணன் குணசேகரனுக்கு ஆதரவாக இருந்த தம்பி கதிர்ஞானம் ஆகிய இருவரும் தற்போது அண்ணனுக்கு எதிராக திரும்பியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து எதிர்நீச்சல் சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் விபு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அதன்படி, கதிரின் கடைசி ஆக்ஷன் என்று பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில, எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அநேகமாக இந்த சீரியல் வரும் ஜூலை 8-ந் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: