Advertisment
Presenting Partner
Desktop GIF

இரண்டரை மணி நேர ஸ்பெஷல் : வைரலாகும் திருமண பத்திரிக்கை ; சீரியல் கல்யாணத்துக்கு இப்படியா!

இதயம் சீரியலின் ஆதி - பாரதி திருமணம் தொடர்பான பத்திரிக்கையை சேனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Idhayam Serial Update
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் கதைக்களம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆதி பாரதியின் கல்யாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் மே 19-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 4 மணி வரை என மொத்தம் இரண்டரை மணி நேர எபிசோடாக கல்யாண ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

Advertisment

இந்த எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதற்காக தான் இவ்வளவு நாளாக காத்திருந்தோம். வெயிட் ஈஸ் ஓவர் என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே ஆதி பாரதி கல்யாணத்தை ஆதிபா கல்யாணம் என்ற பெயரில் ரசிகர்களும் சேனலும் கொண்டாட தொடங்கியுள்ளது. ஆதிபா கல்யாணத்திற்காக திருமண வரவேற்பிதழ் ஒன்றும் சேனல் தரப்பில் வெளியாகி கவனம் ஈர்க்க தொடங்கியுள்ளது.

அந்த அழைப்பிதழில் வரும் மே 19-ம் தேதி ஆதிபா கல்யாணத்தை மதியம் 1.30 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment