scorecardresearch

திருமணத்திற்கு தயாரான சீரியல் ஜோடி : வலைதளத்தில் வித்தியாசமான பதிவு

Tamil Serial Update : இதயத்தை திருடாதே சீரியல் நடிகர் நவீன் தனது சமூக வலைதள பக்கத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

திருமணத்திற்கு தயாரான சீரியல் ஜோடி : வலைதளத்தில் வித்தியாசமான பதிவு

Idhiyathai Thirudathe Serial Update : சமீப ஆண்டுகளாக திரைப்படங்களை காட்டிலும் மக்கள் மத்தியில் சீரியல் தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் கொரோனா ஊரடங்கு என்று சொல்லாம். தற்போது கொரோனா தொற்று குறைந்து இயல்பநிலைக்கு திரும்பினாலும், சீரியல் மீதான மோகம் மக்கள் மத்தியில் அப்படியேதான் இருக்கிறது. இதற்காக தொலைக்காட்சிகளும், அவ்வப்போது புதிய சீரியலையும் களமிறக்கி வருகினறனர்.

இதனால் சீரியல்கள் மக்களின் இன்றியமையாத பொழுதுபோக்காக மாறியுள்ள நிலையில், தினசரி எபிசோடுகளும் பரபரப்பை ஏற்படுத்த தவறுவதில்லை. இநத சீரியல்களை தாண்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்வு சீரியல் ஜோடிகளின் திருமணம். சமீப காலமாக சீரியலில் ஜோடியாக நடித்து வரும் நடிகர் நடிகைகள் நிஜ வாழ்வில் ஜோடிகளாகும் நிகழ்வு அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், ராஜா ராணி சஞ்சீ்வ், ஆல்யா மானசா, திருமணம் சீரியலின் சித்து ஸ்ரேயா, ரேஷ்மா மதன், ஆர்யன் ஷாபனா, உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் நிஜ வாழ்வில் இணைந்துள்ள நிலையில், தற்போது இந்த வரிசையில் புதிதாக இதயத்தை திருடாதே சீரியல் நவீன் கண்மணி ஜோடி நிஜவாழ்வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இதயத்தை திருடாதே சீரியலில், சிவா என்ற கேரக்டரில் நவீன் என்பவர் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பதிவுக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நவீனின் அம்மாவுடன் இதயத்தை திருடாதே சீரியல் நாயகி செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் உள்ளார்.

இந்த புகைப்படத்தின் மீது காதல் என்பதை உணர்த்தும் எமோஜி பதிவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள கண்மணி சேகர் இதற்கு கனா காண்கிறேன் என்ப பாடலை சேர்த்து பதிவிட்டுள்ளார். இதன் மூலம் நவீன் கண்மணி இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அடுத்த சீரியல் தம்பதி ரெடியாகிவிட்டனர் என்று பலரும் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial idhiyathai thirudathe serial pair in real life update