லோக்கல் சேனல் ஆங்கர்… கொரோனாவால் சீரியல் நிறுத்தம்… கண்ணான கண்ணே நிமிஷிகா மீண்டு வந்த கதை…

Serial News : அப்பா மகளின் பாச போராட்டத்தை மையமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், மீராவாக நடிகை நிமிஷிகா நடிக்கிறார்.

Serial Actress Nimishika Lifestyle : சன்டிவியில் பிரபல சீரியல் கண்ணான கண்ணே. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் யுவா மீரா இடையிலான காதல் காட்சி பெரும் பிரபலம். மேலும் இவர்களின் திருமணம் நடந்த எபிசோடுகள் ரசிகர்கள் மத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தையும் பிடித்தது.  இவர்களின் காதல் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

அப்பா மகளின் பாச போராட்டத்தை மையமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், மீராவி்ன் அப்பாவாக பிருத்விராஜ் நடித்து வருகிறார். இதில் மீராவாக நடிகை நிமிஷிகா நடிக்கிறார். ஆர்பாட்டம் இல்லாத தனது அழகான நடிப்பில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள இவர், தொடக்கத்தில் பல இன்னல்கள் மற்றும் போராட்டங்களை கடந்து இந்த நிலையை எட்டியுள்ளார்.

ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த நிமிஷிகா படிப்பிற்காக தமிழகத்தின் கோயம்புத்தூரக்கு வந்துதுள்ளார். பேஷன் டெக்னாலஜி முடித்த இவ கோவையிலேயே செட்டில் ஆன நிலையில், அங்கேயே லோக்கல் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு சின்னத்திரை வாய்ப்பு தேடிய அவருக்கு, விஜய்டிவியின் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் நீலாம்பரி என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.  

தொடர்ந்து மலையாளத்தில் அனுராகம் என்ற சீரியலில் நடித்து வந்தபோது கொரோனா தொற்று காரணமாக இந்த இரண்டு சீரியல்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மாடலிங்கில் வலம் வந்த இவருக்கு கண்ணானே கண்ணே வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டகால ஆசையை முன்னெடுத்துள்ள நிமிஷிகா, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நிமிஷிகா என்ற உண்மையான பெயர் மறந்து மீராவாகவே வலம் இவரும் இவர் தொடக்கத்தில், மீடியாவை தேர்ந்தெடுத்தது அவரின் குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கவில்லை என்றும், அவர்களின் எதிர்ப்பை மீறி தற்போது இவர் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நாயகியாக வலம் வருவது பலருக்கும் ஊன்றுகோலாம அமைந்துள்ளது. அதிலும் யார் எது சொன்னாலும் உன் இலக்கை நோக்கி சென்றுகொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்துவம் விதமாக தற்போது நிமிஷிகா பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial kannana kanne actress nimishika lifestyle

Next Story
Tamil Serial Rating : முல்லைக்கு ஸ்கோப் கொடுக்குறேனு சொல்லி இப்படி பண்றீங்களே டைரக்டர் சார்…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express