தமிழ் சின்னத்திரையில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன் : கண்ணான கண்ணே சீரியல் நடிகை

Serial Actress Akshitha Tamil News : தொடக்கத்தில், தமிழ் மொழி பேசுவதற்கு கடினமாக இருந்தாலும், அதை ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன் என சீரியல் நடிகை அக்ஷிதா கூறியுள்ளார்.

Tamil Serial Actress Akshitha Bopaiah : சினிமா மட்டுமல்ல சின்னத்திரை சீரியல்களிலும் வேற்று மாநில நடிகைகள் தமிழில் நடிப்பது தொடர்ந்து வருகிறது. அவ்வாறு வேறு மாநிலத்தில் இருந்து வரும் நடிகைகளும் விரைவில் தமிழ் கற்றுக் கொண்டு மேலும் பல சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து தற்போது தனது 4-வது சீரியலில் நடித்து வருபவர் அக்ஷிதா போபையா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கன்னட பதிப்பான் வரலட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமான இவர், அதன்பிறகு தமிழக்கு வந்தார். அழகு சீரியலின் மூலம தமிழில் எண்ட்ரி கொடுத்த அவர்,  தொடர்ந்து தாழம்பூ மற்றும் ரெக்க கட்டி பறக்குது மனசு ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது சன்டிவியின் பிரபல சீரியலான கண்ணனா கண்ணே சீரியலில் நடித்து வருகிறார். இந்த  சீரியல் தற்போது 200 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், தனக்கு வந்த சீரியல் வாய்ப்புகளால் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தமிழ் தொலைக்காட்சித் துறையைப் பற்றி நான் போற்றும் ஒரு விஷயம் என்னவென்றால், யார் எங்கிருந்து வந்தாலும், தரமான கலைஞர்கள் மீது அன்பையும் மரியாதையையும் பொழிகிறார்கள். நான் இங்கே ஒரு வெற்றிகரமான மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். தமிழில் எனது 4-வது சீரியலான கண்ணனா கண்ணே, டிஆர்பி ரேட்டிங்கில் சிறப்பான இடத்தை பெற்று வருகிறது. தொடக்கத்தில், தமிழ் மொழி பேசுவதற்கு கடினமாக இருந்தாலும், அதை ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன்.  இப்போது என்னால் சரளமாக தமிழ் பேச முடியும்.  தமிழ் நிகழ்ச்சிகள் டப்பிங் பணிகளுடன்  படமாக்கப்படவில்லை எனக்கு டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுத்தனது என்று அக்ஷிதா கூறியுள்ளார்.

தற்போது கொரோனா தொற்று பாதுகாப்பு வலையத்தில் இருப்பதால், கோனிகோப்பாவில் உள்ள தனது பெற்றோரை பார்க்க செல்ல முடியவில்லை. நிகழ்ச்சி குழு மிகவும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் படப்பிடிப்பு நடத்தி வந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழில் கிடைத்த வரவேற்பை வைத்து மீண்டும் கன்னடத்திற்கு செல்வாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், “சாண்டல்வுட் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக ஒரு அடையாளத்தை உருவாக்குவதே எனது கடைசி கனவு என தெரிவித்துள்ளார்.

தற்போது தான் நடித்துள்ள பி 5, திரிவிக்ரமா போன்ற சில படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. மேலும் ஒரு கன்னட சீரியலில் நடிக்க விரும்பினேன், ஆனால் கண்ணாண கண்ணே சீரியலுக்காக நான் சென்னையில் இருக்கவேண்டி இருந்த்தால், அதில் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கன்னட்த்தில், ரியல் போலீஸ், பிரம்மச்சாரி மற்றும் ஐ லவ் யூ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial kannana kanne serial actress akshitha bopaiah in tamil

Next Story
Tamil Serial Rating : ”நல்லா போய்கொண்டிருந்த சீரியல் இப்படி சொதப்பிட்டாங்களே – பாக்கியலட்சுமி நிலைமை பாருங்க…!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com