ஜீ தமிழின் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள யங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
சினிமாவை விட தற்போது சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் சீரியலில் நடிப்பவர்கள் யாரும் தங்களது வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் நடிப்பதில்லை. ஆனாலும் அவர்களை டிவியில் பார்க்கும்போது அந்த கேரக்டராகத்தான் தோற்றமளிப்பார்கள்.
உண்மையில் அவர்கள் அந்த வயதில் இருப்பவரா என்று பார்த்தால் இல்லை என்று சொல்ல வேண்டிய நிலைதான் வரும். அந்த வகையில், ஜீ தமிழின் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்துவரும் நடிகை ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள இளமை புகைப்படங்கள் இவரா இந்த கேரக்டரில் நடிக்கிறார் என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஜீ தமிழில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கக்பட்டது கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல். ஒரு பெண்ணுக்கும் அவரது மாற்றாந்தாய்க்கும் இடையேயான உறவை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் துஜ்சே ஹை ரப்தா என்ற இந்தி சீரியலின் ரீமேக் ஆகும்.
பதினே குமார், ராஜேஸ்வரி, சந்தோஷ், மனுஷ் மற்றும் ஆஷாராணி நாகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், தொடக்கத்தில் திவ்யா பத்மினி அம்மா கேரக்டரில் நடித்து வந்தார். சில மாதங்களில் அவர் விலகியதை தொடர்ந்து அந்த கேரக்டரில் நடிகை ராஜேஸ்வரி நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஜேஸ்வரி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்களா இந்த கேரக்டரில் நடித்து வருவது என்றும், அவரது அழகை வர்ணித்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“