scorecardresearch

வளர்ப்புத்தாய் – வளர்ப்பு மகள் பாசப் பிணைப்பு : ஜீ தமிழ் புதிய சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால்

Tamil Serial Update : வளர்ப்புத் தாய்க்கும், வளர்ப்பு மகளுக்கும் இடையிலான பாசமிகு அழகிய பந்தத்தினை எடுத்துரைக்கும் விதமாக இந்த சீரியலின் திரைக்கதை

வளர்ப்புத்தாய் – வளர்ப்பு மகள் பாசப் பிணைப்பு : ஜீ தமிழ் புதிய சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால்

Zee Tamil Serial Update : ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியல்கள் ஒளிபரப்புவதில், மற்ற சேனல்களுக்கு போட்டியாக தற்போது ஜீ தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் யாராடி நீ மோகினி சீரியல் என்று சொல்லலாம். அதற்கு முன்பு சில சீரியல்கள் ஒளிபரப்பானாலும் யாரடி நீ மோகினி ரசிகர்கள் மத்தியில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், ஜீ தமிழ் அடுத்து பல புதிய சீரியல்களை களமிறங்கி வருகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 11-ந் தேதி (திங்கள் கிழமை) முதல் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உளளது. ஒரு வளர்ப்புத் தாய்க்கும், வளர்ப்பு மகளுக்கும் இடையிலான பாசமிகு அழகிய பந்தத்தினை எடுத்துரைக்கும் விதமாக இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் நாயகி ஆதிரா ஒரு புத்திசாலித்தனமான, பரபரப்பான டீன் ஏஜ் பெண். ஆனால் கடந்த காலங்களில் தனக்கு ஏற்பட்ட சகப்பான அனுபவத்தினால், அவளது வளர்ப்புத்தாய் சுபத்ராவை அவள் வெறுக்கிறாள். ஆனால் இடையில் இந்த வெறுப்பு தவறானது என்று அவள் உணரும்போது இருவருக்குமான உறவில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.

அதன்பிறகு இவர்களுக்கு இடையே உண்டான பாசப்பினைப்பு நீடித்ததா அடுத்து என்ன நடந்தது என்பதே கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் கதை என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 முதல் மதியம் 2 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரபபாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial kannathil muthamittal new serial in zee tamil