சண்முகத்துக்கு நடந்த புது கல்யாணம்? பரணிக்கு தெரிந்தால் என்ன ஆகும்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் சரவணனாக கோப்பெருந்தேவி வீட்டில் சிக்கிக்கொண்ட நிலையில் இன்று, சரவணன் கெட்டப்பில் சென்ற சண்முகத்தை கல்யாணம் முடிந்தால் தான் வெளியே போக வேண்டும் என ரூமுக்குள் அடைத்து வைக்கின்றனர். அடுத்த நாள் காலையில் கோப்பெருந்தேவியுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து சரவணனாக நடித்து கொண்டு இருக்கும் சண்முகத்தை மணமேடைக்கு ஏற்று விடுகின்றனர்.
சண்முகம் மணமேடையில் இருக்க சரவணன் உள்ளே வர முடியாமல் தவிக்க கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. கோப்பெருந்தேவிக்கு மட்டுமே மாப்பிள்ளையாக இருப்பது சண்முகம் என்ற ரகசியம் தெரியும். சண்முகம் கையில் தாலியை கொடுத்து கட்டவும் சொல்ல வேறு வழியின்றி கோப்பெருந்தேவி கழுத்தில் தாலி கட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்திக், தீபா கல்யாணத்தை நிறுத்த கிளம்பிய ஆனந்த்.. அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மண்டபத்திற்கு வந்த ஜோசியர் தீபாவுக்கு கல்யாணம் ஏற்பாடா ஒரு உசுர பணயம் வச்சு இந்த கல்யாணம் நடக்கணுமா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இன்று, ஜானகி மற்றும் தர்மலிங்கம் என இருவரும் ஜோசியருடன் நாங்கள் இந்த விஷயத்தை ஏற்கனவே சம்பந்தி அம்மா கிட்ட பேசிட்டோம்..அவங்க கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கணும் என்று ஆசைப்படுறாங்க.
அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு நம்புறாங்க. என்ன காப்பாத்துறதுக்காக தாலியை கழட்டிய தீபா கழுத்துல தாலி ஏறணும் அத நான் பார்க்கணும் என்று சொல்றாங்க என்று சொல்கின்றனர். பிறகு ஜோசியர் இங்கிருந்து கிளம்பிச் செல்ல இவர்கள் பேசிய அனைத்தையும் ஆனந்த் கேட்டு விட்டான் என்பது தெரிய வருகிறது. பிறகு அம்மாவோட உயிருக்கு ஆபத்தா இந்த கல்யாணத்தை நான் நடக்க விட மாட்டேன் என்று சொல்லி அபிராமியிடம் வந்து விஷயத்தை சொல்ல அபிராமி இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்கிறாள்.
பிறகு ஆனந்த் கார்த்தியிடம் விஷயத்தை சொல்லப் போவதாக சொல்ல அபிராமி அவனை தடுத்து நிறுத்துகிறாள். மறுபக்கம் குடோனில கட்டப்பட்டிருக்கும் தீபா ரவுடிகளிடம் ரெஸ்ட் ரூம் போகணும் என்று சொல்ல அதில் ஒருவன் பாவப்பட்டு கட்டை அவிழ்த்து விட தீபா அங்கிருந்து தப்பித்து வெளியே வருகிறாள். இங்கே தர்மலிங்கம் மற்றும் ஜானகி ஆகியோர் தீபாவிடம் உண்மையை சொல்லிவிட முடிவெடுக்கின்றனர். பிறகு தீபாவை சந்தித்து இந்த கல்யாணம் நடந்தால் அபிராமி உயிருக்கு ஆபத்து என்று செல்கின்றனர்.
இதை கேட்டதும் தீபா வேடத்தில் இருக்கும் ரியா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும், நீங்க உங்கள பத்தி மட்டும் யோசிங்க என்று சொல்ல தர்மலிங்கம், ஜானகிக்கு தீபா இப்படி சொல்ல மாட்டாளே என்று சந்தேகம் எழுகிறது.
குடோனில் இருந்து தப்பித்த தீபா ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பித்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“