Advertisment

பல்பு வாங்கிய மாப்பிள்ளை: பாட்டியை சமாளிப்பாரா ஹீரோ? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின், கார்த்திகை தீபம் மற்றும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
karthigai Deepam And

களைகட்டிய தல பொங்கல் கொண்டாட்டம்.. சண்முகத்துக்கு ஆதரவாக முத்துப்பாண்டி, பல்பு வாங்கிய வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் சண்முகம் குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து பொங்கல் கொண்டாட வைகுண்டம் எல்லோருக்கும் விபூதி வைத்துவிட்டு ஆசீர்வாதம் செய்ய தொடங்கிய நிலையில் இன்று ரத்னா வைகுண்டம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க போக வெங்கடேஷ் அவளுடன் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்க முயற்சி செய்ய ரத்னா அவனை விலக்கி வைக்கிறாள்.

அடுத்ததாக மறுபக்கம் சிவபாலன் துணி எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு சண்முகம் வீட்டிற்கு கிளம்ப தயாராக சௌந்தரபாண்டி இதைப்பார்த்து எங்கடா கிளம்புற என்று கேட்க அண்ணனுக்கு இது தல பொங்கல் சண்முகம் மாமா வீட்ல பொங்கல் கொண்டாட போறோம் என்று சொல்கிறான். உங்க அம்மா எங்க அவளை காபி போட சொல்லு என்று சொல்ல அம்மா எப்போவோ போயிடுச்சு என்று சாக் கொடுக்கிறான்.

சௌந்தரபாண்டியன் அப்ப எனக்கு யாரு காபி போடுவா என்று கேட்க அதான் உங்க அக்கா இருக்காங்களா போட்டு கொடுக்க சொல்லு என சிவபாலன் கிளம்பி விடுகிறான். பிறகு சண்முகம் வீட்டுக்கு வந்த சிவபாலன் அம்மா எல்லாருக்கும் தல பொங்கலுக்கு துணி எடுத்துக் கொடுத்ததாக சொல்லி கொடுக்கிறான். பரணி அம்மா வரலையா என்று கேட்க அம்மா எனக்கு முன்னாடியே கிளம்புச்சு ஆனா இங்க வரல..

Advertisment
Advertisement

அண்ணே அங்க வீட்ல எல்லாரோடவும் தல பொங்கல் கொண்டாடனும்னு அம்மா ஆசைப்பட்டுச்சு. ஆனால் இங்கே வந்து விட்டதுல அம்மாவுக்கு விருப்பமில்லை என்று சொல்ல முத்துப்பாண்டி சண்முகம் சொல்லி நான் இங்க வரல நானா ஆசைப்பட்டு தான் வந்தேன் என சண்முகத்துக்கு ஆதரவாக பேசுகிறான். அதைத்தொடர்ந்து எல்லோரும் பாக்கியம் எடுத்துக் கொடுத்த புது துணியை கட்டிக் கொள்கின்றனர்.

சண்முகம் முத்துப்பாண்டிக்கு செய்யவேண்டிய தாய்மாமன் முறையை செய்வதற்காக தயக்கத்துடன் இருக்க வைகுண்டம் நீ தான் செய்யணும் என்று சைகை காட்ட முத்து பாண்டியன் இசக்கி இடம் இதெல்லாம் எதுக்கு என மறைமுகமாக சண்முகத்திடம் பேச செய்ய வேண்டியது செய்யணும் இல்ல என்று சண்முகம் முறை செய்கிறான்.

இந்த சமயத்தில் வீட்டுக்கு வரும் அறிவழகன் எல்லாருக்கும் வாழ்த்து அட்டையை கொடுத்து பொங்கல் வாழ்த்து சொல்கிறான். எல்லோரும் ஜோடி ஜோடியாக சாப்பிட உட்கார வெங்கடேஷ் ரத்னா பக்கத்தில் உட்கார போக அறிவழகன் உள்ளே புகுந்து ரத்னா பக்கத்தில் உட்காருகிறான். பரீட்சைனாலும் பந்தினாலும் அன்னையிலிருந்து ரத்னா பக்கத்துல நான் தான் உக்காருவேன். 
பரீச்சைனா பார்த்து எழுதுவேன்.. பந்தினா அவ இலையில் இருக்கிற பாதியை நான் தான் எடுத்து சாப்பிடுவேன் என்று சொல்கிறான். இதைப் பார்த்து வெங்கடேஷ் கடுப்பாகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரமேஸ்வரி பாட்டியின் திடீர் வருகை.. கார்த்திக் சமாளிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் ரேவதியை கோலம் கலையாமல் வெளியே அழைத்து வரவேண்டும் என சாமுண்டீஸ்வரி வைத்த போட்டியில் கார்த்திக் ஜெயித்த நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் பொங்கல் கொண்டாட மயில்வாகனம் சும்மாவே இருந்தா எப்படி? எதையாவது விளையாடலாம் கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடலாம் என்று ஐடியா கொடுக்க எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.

மயில் வாகனம் கண்ணை கட்டிக்கொண்டு ரோகிணியை பிடித்து கட்டி அணைத்து விடலாம் என்று திட்டம் போட்டு தூணை கட்டிப்பிடிக்கிறான். அதைத் தொடர்ந்து மகேஷ் கண்ணை கட்டிக்கொண்டு ரேவதி தேடிச் செல்ல கடைசியில் மாயாவை கட்டி அணைக்கிறான். இதைத்தொடர்ந்து ரேவதி கண்ணை கட்டிக் கொண்டு மகிழ்ச்சியை தேடிச் செல்லும் போது கார்த்தியை கட்டிப்பிடித்து விடுகிறாள். அடுத்ததாக சந்திரகலா கண்ணை கட்டிக்கொண்டு சாமுண்டீஸ்வரி தேடிச் செல்ல கால் தடுக்கி கீழே விழுகிறாள். 

இப்படி குடும்பத்தினர் எல்லோரும் ஜாலியாக கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்க கார்த்திக்கு பரமேஸ்வரி பாட்டியிடம் இருந்து போன் கால் வருகிறது. பேராண்டி நான் வெளியே தான் இருக்கேன் மாறு வேஷத்துல வந்து இருக்கேன். பேர புள்ளைங்கள பாக்கணும்.. என்னை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போ என்று சொல்ல கார்த்திக் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? கார்த்திக் சாமுண்டீஸ்வரி குடும்பத்தை எப்படி சமாளிக்கப் போகிறான் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment