காதலை சொன்ன நாயகன், மனைவியை தொல்லை பண்ணும் கணவன்: உண்மையை நிரூபிப்பாரா அண்ணா?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம், அண்ணா மற்றும் கெட்டிமேளம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்பபோம்

ஜீ தமிழின் கார்த்திகை தீபம், அண்ணா மற்றும் கெட்டிமேளம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்பபோம்

author-image
WebDesk
New Update
Zee tamil ayilu anna

காதலை வெளிப்படுத்தும் கார்த்திக்.. கோபத்தில் வெளியே கிளம்பிய ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா  ஸ்டேஷனில் இருந்து தப்பித்த நிலையில் இன்று, மாயா தப்பித்த விஷயம் கார்த்திக் தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பார்த்து ரசித்தபடி இருக்கிறாள். மேலும் அந்த போட்டோவை பார்த்து கார்த்தியை கொஞ்சம் கொண்டிருக்க ரூமுக்கு வந்த அவன் இதை பார்த்து ரேவதியிடம் சத்தம் போடுகிறான். எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறான்.

இதை பார்த்துவிட்ட மயில்வாகனம் கார்த்தியிடம் எதுக்கு இப்படி கோபப்படுற என்று கேட்க கார்த்திக் ரேவதி செய்ததெல்லாம் பார்த்து என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்கிறான். சரிப்பா அந்த பொண்ணை சமாதானப்படுத்தலாம் என்று ரூமுக்கு அழைத்துச் செல்ல அங்கு ரேவதி இல்லை என்பது தெரிய வருகிறது. ரேவதி பரமேஸ்வரி பாட்டி ரூமுக்கு வந்து படுத்து விட்ட நிலையில், கார்த்திக் அங்கு வந்து அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறான்.

பிறகு ரேவதி தூங்கும் போது கார்த்திக் அவரது பக்கத்தில் உட்கார்ந்து எனக்கும் உன்னை பிடிக்கும். ஆனா என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கு என்று மனதுக்குள் இருக்கும் விஷயத்தை முதல் முறையாக வெளிப்படுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

கௌதமை சிக்க வைத்த சண்முகம்.. சௌந்தரபாண்டியை மிரட்டும் வைஜெயந்தி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் கௌதமை கூண்டில் ஏற்றி விசாரிக்க தொடங்கிய நிலையில் இன்று, வீரா கௌதமின் ப்ரண்ட்ஸ்களை பிடித்து காருக்குள் உட்கார வைத்து காவல் இருக்க சிவபாலன் அவளுக்கு ஜூஸ் வாங்கி வந்து கொடுத்து காதல் அளப்பறைகளை செய்கிறான். இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி இறந்து போன மாலதி டீச்சரின் அண்ணன் துரையை அழைத்து வந்து வெளியே காத்திருக்கிறான்.

சண்முகம் கௌதமிடம் ஒரு போட்டோவை காட்டி இதில் இருபவர்களை தெரியுமா என்று விசாரிக்க, யாரையும் தெரியாது என்று சொல்கிறான். அடுத்த போட்டோவை காட்ட அதில் கௌதம் நண்பர்களுடன் இருக்க கௌதம் எல்லாரையும் தெரியும் என்று உண்மையை ஒப்பு கொள்கிறான். நீதிமன்றம் 10 நிமிடம் இடைவேளையை அறிவிக்க, வைஜெயந்தி சௌந்தரபாண்டியை சந்தித்து என்ன மாப்பிளையோட சேர்ந்திட்டு விளையாட்டு காட்டுறீங்களா? என்று கோபப்படுகிறாள்.

கொன்னுடுவேன் என்று மிரட்ட சௌந்தரபாண்டி இப்படியெல்லாம் பேசினா கோர்ட்டில் எல்லா உண்மையையும் சொல்லிடுவேன். உங்க புருஷன் பண்ண தவறுகளில் உங்களுக்கும் பங்கு இருக்கு என்று எச்சரிக்கிறார். சிவனாண்டி வைஜெயந்தியை சமாதானம் செய்து அழைத்து செல்கிறார். போகும் போது வீரா கௌதமின் நண்பர்களை பிடித்து வைத்திருப்பதை பார்த்து கொன்னுடுவேன் என்று எச்சரிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்தடுத்த உளறிய அஞ்சலி.. உச்சகட்ட டென்ஷனில் மகேஷ் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அஞ்சலி அப்பா வரலையா என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று துளசி இப்போ அப்பா எங்க நம்ப கூட இருக்காரு அவ தான் இறந்துட்டாரே என்று சொல்ல அஞ்சலி அவர் எப்பவும் நம்ம கூட இருக்கிறார் என்ற நினைப்புல இப்படி கேட்டுட்டேன் என சமாளிக்கிறாள். அதன் பிறகு எல்லோரும் சாப்பிட உட்கார அஞ்சலி மகேஷிடம் எப்படி ஃபையர்  ஆக்சிடென்ட் ஏற்பட்டது என்று கேட்க மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக சொல்கிறான்.

இதைக் கேட்டு அஞ்சலி நான் ரூம்ல போய் சாப்பிடுறேன் என்று கிளம்பி செல்ல அஞ்சலி இப்படி பண்ற ஆள் இல்லையே என்று சந்தேகமடைகின்றனர். தொடர்ந்து துளசி வெற்றிக்கு போன் போட்டு தியா குறித்து விசாரிக்கிறாள். வெற்றி பாப்பாவை மட்டும் தான் விசாரிப்பீங்களா? உங்களுக்காக இங்கே ஒரு ஜீவன் காத்துக்கிட்டு இருக்கு. அத பத்தி எல்லாம் விசாரிக்க மாட்டீங்களா என்று கேட்க துளசி என் நினைப்பெல்லாம் தீயா மேல தான் என்று சொல்லி போனை வைக்கிறாள்.  
பிறகு துளசி அஞ்சலியுடன் படுத்துக் கொள்வதாக சொல்ல மகேஷ் அதிர்ச்சி அடைகிறான்.

பிறகு அஞ்சலியுடன் படுத்துக் கொள்ளும் துளசி சிறுவயதில் நடந்த விஷயங்களை பேச மதி ஒன்றும் புரியாமல் இருக்கிறாள். பாதி கதையை சொல்லிய துளசி மீதி கதையை நீயே சொல்லு என்று கேட்க அஞ்சலி தப்பு தப்பாக சொல்ல துளசி சந்தேகம் அடைந்து லட்சுமி ரூமுக்கு செல்கிறாள். மகேஷ் ரூமுக்கு வர மதி குறட்டை விட்டு தூங்க அவளைத் துரத்தவும் முடியாமல் இருக்க சொல்லவும் முடியாமல் குழப்பத்தில் தவிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: