சாமுண்டீஸ்வரி கொல்ல நடக்கும் சதி.. சிவனாண்டிக்கு கொம்பு சீவி விட்ட அம்மா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.!!
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமி சாமுண்டீஸ்வரியின் மகள்களை பார்க்க கோவிலுக்கு வந்திருந்த நிலையில் அனைவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டதை தொடர்ந்து இன்று, அபிராமி சாமுண்டீஸ்வரியின் மகள்களை பார்த்துவிட்டு ரேவதியிடம் தன்னை அத்தை என கூப்பிட சொல்லி ஆசைப்பட ரேவதியும் அத்தை என சொல்லி கூப்பிட அந்த சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.
அதைத்தொடர்ந்து சிவனாண்டி குடும்பத்தில் அவனது அம்மா இறந்து போன தன்னுடைய கணவரின் போட்டோ முன்னாடி நின்று இவருடைய சாவுக்கு காரணம் அந்த சாமுண்டீஸ்வரி அவை இன்னும் உயிரோட இருக்கா உன் அப்பாவ கொன்னவள இன்னும் எதுவும் பண்ணாம சும்மா இருக்க என சிவனாண்டியை பிடித்து திட்டுகிறாள். தனது கணவனுக்கு பிடித்தது எல்லாம் செய்து படையல் போட்டு அதை சிவனாண்டிக்கு கொடுத்து சாப்பிட சொல்கிறாள்.
சிவனாண்டியும் ரசித்து ருசித்து சாப்பிட என்ன நீ அந்த சாமுண்டீஸ்வரி எதுவும் பண்ணல என கோபப்பட அவன் போன வாரம் கூட ரெண்டு ஆட்களை அனுப்பி இருந்ததாக சொல்ல உன் அப்பாவ கொன்னவளை உன் கையால தான் கொல்லனும் என திட்டுகிறாள். இதைத்தொடர்ந்து சிவனாண்டி தன்னுடைய மனைவி சந்திரகலாவுக்கு போன் போட்டு சாமுண்டீஸ்வரி என்ன பண்றா என்று விசாரிக்க செங்கல் சூளைக்கு கிளம்பி கொண்டிருப்பதாக சொல்கிறாள்.
சிவனாண்டி இன்னையோட அவ கதை முடிந்தது என்று சொல்ல சந்திரகலா கார்த்தியை அங்க வர விடாமல் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி போனை வைக்கிறாள். இதைத் தொடர்ந்து சிவனாண்டி சாமுண்டீஸ்வரி கொல்ல சூளைக்கு கிளம்ப தயாராக இங்கே ஸ்வேதா சாமுண்டீஸ்வரியை யாரோ அறிவாளால் வெட்டுவது போல கனவு கண்டு பயந்து அழுகிறாள். இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடமும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரத்னாவை மீட்ட சண்முகம்.. ஹாஸ்பிடலில் டாக்டர் கொடுத்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவை ரவுடிகள் கடத்தி செல்ல முயன்ற கடைசி நொடியில் சண்முகம் பார்த்து விட்ட நிலையில் இன்று, சண்முகம் ரவுடிகளிடம் சண்டை போட்டு ரத்னாவை அங்கிருந்து மீட்டு வேறொரு ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து சேர்கிறான். ஆனால் ரத்னாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் ஜூனியர் டாக்டர் என்னால் எதுவும் செய்ய முடியாது.
சீனியர் டாக்டருக்கு சொல்லி இருக்கோம். உங்களுக்கும் தெரிந்த டாக்டர் யாராவது இருந்தால் வரவைக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்ல சண்முகம் செய்வதறியாது தவிக்கிறான்.
அதனை தொடர்ந்து வெட்டுக்கிளி நம்ம அண்ணியை விட பெரிய டாக்டர் யாரு அண்ணே? அவங்க தான் நம்ம குலசாமி, அவங்களை வர சொல்லு என்று சொல்ல சண்முகம் யோசிக்க வெட்டுக்கிளி நீ போன் பண்றியா நான் பண்ணட்டுமா என்று கேள்வி கேட்கிறான். இதனால் ஷண்முகம் பரணிக்கு போன் செய்ய அவள் ரத்னா குறித்து விசாரிக்க சண்முகம் ரத்னா கிடைத்து விட்டதாக சொன்னதும் பரணி சந்தோஷமடைகிறாள். ஆனால் என ரத்னாவின் நிலை குறித்து எடுத்து சொல்ல பரணி ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள். ரத்னாவை பரிசோதனை செய்த டாக்டர் என்னால் தனியாக ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியாது, இன்னும் 2 அல்லது மூன்று டாக்டர் வேண்டும் என்று சொல்கிறாள்.
மேலும் பரணி என்னுடைய ப்ரண்ட்ஸ்களை வர வைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கிறேன் என்று சொல்லி தனது ப்ரண்ட்ஸ்களை வர வைக்கிறாள். பிறகு ரத்னாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஸ்வேதா மீது வந்த சந்தேகம்.. சாரதாவை சந்திக்கும் எழில், உண்மைகள் உடையுமா? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்வேதா இந்துவின் தங்கையாக வீட்டிற்குள் நுழைந்த நிலையில் இன்று, ஸ்வேதா ரூமுக்குள் இருக்க அங்கு வந்த குழந்தைகள் உங்களை சித்தினு கூப்பிடலாமா என்று கேட்க அவளும் தாராளமாக கூப்பிடலாம் என்று சொல்கிறாள். அதன் பிறகு அஞ்சலி பேப்பரில் செய்த கேமராவை கிப்டாக கொடுக்கிறாள்.
அஞ்சலி ஆசையாக கொடுத்த கிஃப்ட்டை குழந்தைகள் சென்ற பிறகு இதெல்லாம் ஒரு கிப்ட்டாக என கசக்கி போடுகிறாள். அடுத்து ஸ்வேதா தனது தோழியிடம் பேசி கொண்டிருக்க அஞ்சலி இந்த பக்கமாக வர தான் கொடுத்த கிப்ட் கசக்கி கீழே போடப்பட்டு இருப்பதை கவனிக்கிறாள். அதன் பிறகு சுடர் வர அஞ்சலி நான் கொடுத்த கிஃப்ட்டை கசக்கி போட்டுட்டாங்க, இவங்க உண்மையாவே அம்மாவோட தங்கச்சி தானா? அம்மாவோட தங்கச்சியா இருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்டாங்க. எனக்கு சந்தேகமா இருக்கு என்று சொல்ல சுடர் அவளை சமாதானம் செய்கிறாள்.
மறுபக்கம் ரவுடிகளின் பிடியில் சிக்கிய சாரதா அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வர ரவுடிகளும் பின்தொடர்ந்து துரத்தி வருகின்றனர். ஓரிடத்தில் சாரதா அடிபட்டு கீழே விழ மக்கள் ஒன்று கூடி விடுகின்றனர். இதனால் ரவுடிகள் அங்கு சென்றால் ஆபத்து தான் என எஸ்கேப் ஆகி விடுகின்றனர். சாரதாவிடம் மக்கள் உங்களுக்கு தெரிந்தவங்க போன் நம்பர் குடுங்க என்று சொல்லி கேட்க அவளும் ஒரு நம்பர் கொடுக்க அந்த நம்பருக்கு போன் செய்ய எழிலுக்கு போன் வருகிறது.
உங்களுக்கு தெரிந்தவங்களை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்கோம். உடனே ஹாஸ்பிடல் வாங்க என்று சொல்லி போனை வைக்கின்றனர். எழில் சாரதாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.