அபிராமிக்காக புடவை எடுத்த ரேவதி.. விஷயம் அறிந்து பதறிய கார்த்திக், நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சிவானாண்டியிடம் சவால் விட்டதை பற்றி மயில் வாகனம் சாமுண்டீஸ்வரியின் மகள்களிடம் சொல்லிய நிலையில் இன்று, ரேவதி மறுநாள் காலையில் காபி போட்டு வந்து கார்த்தியிடம் கொடுக்கிறாள். கார்த்திக் என்னங்க எனக்கு காபி எல்லாம் போட்டு வந்து கொடுக்கறீங்க என்று கேள்வி கேட்கிறான்.
நீங்களும் இந்த வீட்டில் ஒருத்தர் தான். பல நாளா எங்க அம்மா மனசுல இருந்த சோகத்தை வெளியே கொண்டு வந்து நீங்க தான் என்று சொல்கிறாள். பிறகு கார்த்திக்கு காபி கொடுத்து விட்டு ஊஞ்சலியில் உட்கார்ந்து உங்களுக்கு என்ன பிடிக்கும் என்றெல்லாம் கார்த்திக் குறித்து கேட்டு தெரிந்து கொள்கிறாள், கார்த்திக் அப்படியே தூங்கி விட ரேவதி அவனுக்கு போர்வையை போத்தி விட்டு சென்று விடுகிறாள்.
அடுத்த நாள் கடைக்காரர் ஒருவர் புடவைகளுடன் வீட்டிற்கு வருகிறான். கார்த்திக் யார் என்று விசாரிக்க, இந்த வீட்டில் தான் புடவை கொண்டு வர சொன்னதாக சொல்ல. துர்கா நான் தான் வர சொன்னேன் என்று சொல்கிறாள். பிறகு புடவைகளை எடுக்கும் போது ரேவதி சில புடவைகளை காட்டி ஓகே வா என்று கேட்க கார்த்திக்கும் ஓகே சொல்லி போன் பேச வெளியே செல்கிறான்.
புடவை எடுத்து முடித்ததும் ரேவதி இரண்டு பேக்குடன் வந்து வா போகலாம் என்று சொல்ல கார்த்திக் எங்கே என்று கேட்க, உங்க அம்மாவுக்காக தான் புடவை எடுத்தேன் என்று சொல்ல கார்த்திக் ஷாக் ஆகிறான். இதை முதல்லேயே சொல்லி இருந்தா வேண்டாம்னு சொல்லி இருப்பேனே என்று சொல்ல ரேவதி அதனால் தான் சொல்லல என்று சொல்கிறாள்.
அடுத்து கார்த்திக்கை கூப்பிட அவன் ஒரு போன் பேசி விட்டு வருவதாக சொல்ல, ரேவதி அதெல்லாம் வேண்டாம் என்று அழைத்து கொண்டு கிளம்புகிறாள். போகும் போது வழியில் காரை நிறுத்தும் கார்த்திக் அபிராமிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி இப்போ நாமா பணக்காரங்க என்பது தெரிய போகுது என்று பதற அபிராமி நீ கவலைப்படாத அவளை ரேஷன் கடைக்கு கூட்டிட்டு வா என்று சொல்லி போனை. வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நகையை கொடுத்த ரத்னா.. பதிலடி கொடுத்த பரணி, காரணம் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்குள் கூப்பிட வேண்டும் என்று செக்மேட் வைத்த நிலையில் இன்று, சண்முகம் நீ மன்னிப்பு கேட்கலைனா என் அத்தையை நான் சாதாரணமா எல்லாம் கூட்டிட்டு போக மாட்டேன்.. 1 வருஷம் வாழ்ந்த இசக்கியையே அவ்வளவு பிரம்மாண்டமாக கூட்டிட்டு போனேன், இத்தனை வருஷம் வாழ்ந்த என் அத்தையை யானை மேல உட்கார வைத்து கூட்டிட்டி போவேன் என்று மிரட்ட சௌந்தரபாண்டி வேறு வழியின்றி மன்னிப்பு கேட்டு பாக்கியத்தை உள்ளே அழைத்து செல்கிறான்.
பிறகு ஷண்முகம் முதல் முறையாக அமைதியான முறையில் ஒரு விஷயத்தில் வெற்றி கண்டதால் குடும்பத்தினர் சந்தோசப்படுகின்றனர். இதை தொடர்ந்து ஷண்முகம் பரணியிடம் பார்த்தியா உன் அப்பனை ஜெயித்துட்டேன் என்று பேச பரணி இதுல ஜெயித்தால் மட்டும் போதாது? கொடுத்த வாக்குலயும் ஜெயிக்கணும் என்று சொல்லி ரொமான்டிக்காக நெருங்குகிறாள்.
அடுத்து ரத்னா ஷண்முகம் போட்ட நகைகளை கொண்டு வந்து அண்ணன் எனக்கு இந்த நகையை போட்டதில் உனக்கு விருப்பம் இல்லனு எனக்கு தெரியும்.. இந்த நகை எனக்கு வேண்டாம், நீயே வச்சிக்க என்று சொல்லி கொடுக்க பரணி என்ன நினைச்சிட்டு இருக்க நீ? உன் அண்ணன் உனக்கு நகை போட்டதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, ஆனால் இந்த வீட்டுக்கு ஒரே மூலாதாரமாக இருக்க கடையை அடகு வைக்கணுமா என்பது தான் என்னுடைய கோபம் என்று சொல்கிறாள்.
மேலும் இந்த நகையை நான் வாங்க மாட்டேன்.. உன் அண்ணன் தானே உனக்கு போட்டான், அவன் கிட்டயே கொண்டு போய் கொடு என்று பதிலடி கொடுக்க ரத்னா சூடாமணி போட்டோ பக்கத்தில் நகையை வைத்து விட்டு வேணும்ங்கிறவங்க இதை எடுத்துக்கலாம் என்று சொல்ல பரணி நகையை எடுக்காமல் நகர்ந்து செல்கிறாள். இசக்கி பாக்கியத்தை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.