Advertisment

மணப்பெண் கடத்தல்: மாறுவேடத்தில் வந்த வில்லி: ஹீரோ யாருக்கு தாலி கட்டுவார்?

மணப்பெண் தீபா வேடத்தில் மேடை ஏறிய ரம்யா கழுத்தில் கார்த்திக் தாலி கட்டுவாரா?

author-image
WebDesk
New Update
kaaa

தீபா வேடத்தில் மணமேடை ஏறிய ரியா.. கார்த்திக்கு வந்த வார்னிங் - கார்த்திகை தீபம் வீக்கென்ட் எபிசோட் அப்டேட்

Advertisment

கார்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா, ரியா மற்றும் ஐஸ்வர்யா என மூன்று பேரும் சேர்ந்து தீபாவை கடத்திய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, தீபாவை ஒரு குடோனில் அடைத்து வைத்த பிறகு தீபா போலவே மாஸ்க் அணிந்து வரும் ரியா என்ன பார்க்கிற? உன்னை மாதிரியே மாஸ்க் அணிந்து நான் தான் மணமேடை ஏறி கார்த்திக் கையால் தாலி கட்டிக்க போறேன் என்று சொல்கிறாள்.  இதனை தொடர்ந்து மறுபக்கம் தீபாவை காணாமல் மண்டபத்தில் எல்லாரும் பதற்றத்தில் இருக்க ரியா மாறுவேடத்தில் தீபா போல் மண்டபத்திற்குள் நுழைகிறாள், மீனாட்சியும் மைதிலியும் எங்க போய்ட்ட என்று கேட்டு வியர்வையை துடைக்க போக ரியா தொட விடாமல் நானே துடைத்து கொள்கிறேன் என்று புடவையை எடுத்து துடைத்து சமாளிக்கிறாள்.

கார்த்திக் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு போன் செய்து தப்பித்து சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று விசாரிக்க அவர் அவங்க இன்னும் கிடைக்கவில்லை, கல்யாணத்தை நிறுத்த அவர்கள் மாறுவேடத்தில் அங்கு வந்தாலும் வரலாம் என்று வார்னிங் கொடுக்கிறான். கார்த்திக் அருணிடம் விஷயத்தை சொல்ல அவனுக்கு ஐஸ்வர்யா மீது சந்தேகம் வருகிறது. இதை தொடர்ந்து மீனாட்சி மற்றும் மைதிலி என இருவரும் இது தீபா மாதிரியே தெரியலையே எதோ தப்பா இருக்கு என்று பேசி கொள்ள முகத்தை மறைத்து கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் ரம்யா இதை கேட்டு உண்மையை கண்டி பிடித்து விடுவார்களோ என்று டென்ஷனாகிறாள்.

அடுத்து தீபா வேடத்தில் ரியாவை மணமேடைக்கு அழைத்து வந்து புடவை கொடுத்து தயாராகி வர சொல்கின்றனர். தர்மலிங்கம் ஜானகி மண்டபத்திற்கு வெளியே எல்லாரையும் வரவேற்று கொண்டிருக்க அங்கு வந்த ஜோசியர் தீபாவுக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது, நான் சொன்னதை மறந்துடீங்களா என்று கேள்வி கேட்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீண்டும் சீனு, மாயா வாழ்க்கையில் வீசும் புயல்.. ஷாரு என்ட்ரியால் நடக்க போவது என்ன? சந்தியா ராகம் வீக்கெண்ட் எபிசோட் அப்டேட்

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி ஷாருவை வைத்து ரகுராம் குடும்பத்துக்குள் நுழைய புவனேஸ்வரி லிங்கத்துக்கு ஐடியா கொடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

அதாவது, ஷாரு ரகுராம் வீட்டிற்கு வந்து என்னுடைய வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்ல போறீங்க? என் அப்பா மன்னிப்பு கேட்டதெல்லாம் இருக்கட்டும், இந்த வீட்டோட பொண்ணா நான் இந்த வீட்டில் இருந்து இருக்கேன், அப்படி இருக்கும் போது இனி என் வாழ்க்கைக்கு என்ன பதில், எனக்கான நியாயம் கிடைக்கும் வரை நான் பஞ்சாயத்து நடந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று காத்துக் கொண்டிருக்கிறாள்.

நைட் முழுவதும் ஷாரு அங்கேயே காத்திருக்க இங்கே சீனு மாயாவுக்கு போன் போட்டு நீ ஒன்னும் பயப்படாத என்று ஆறுதல் சொல்ல மாயா ஷாரு வந்தது தான் பயமா இருக்கு என்று சொல்ல அவளை யாரும் ஏத்துக்கலயே என்று சொல்கிறான். பிறகு யாரோ வர மாயா போனை வைக்க சீனு நேரடியாக பேச வந்து மாயாவை நெருங்கி செல்கிறான்.

இந்த நேரத்தில் ரகுராம் வீட்டிற்கு வர பின்னாடியே சாருவும் வர இருவரும் அவளை பார்த்து ஷாக் ஆகின்றனர். இப்போ தான் புயல் ஓய்ந்து இருக்கு, இயல்புநிலை திரும்பியதும் பேசிக்கலாம் என்று சொல்லி ஷாருவை உள்ளே அனுப்ப பத்மா அவளை அழைத்து செல்கிறாள். அடுத்து மாயா காலேஜ் கிளம்ப மணி சீனுவை அழைத்து போக சொல்ல பத்மா ஆட்டோவில் போகட்டும் என்று சொல்கிறாள். ஷாரு சீனுவே கூட்டிட்டு போகட்டும், மாயாவுக்கு இந்த குடும்ப கௌரவம் தான் முக்கியம்,. அவளால் எந்த பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று சொல்கிறாள்.

ரகுராமும் அதான் ஷாரு சொல்லிட்டாளே என்று சீனுவிடம் மாயாவை விட்டு விட்டு வர சொல்கிறாள். மாயா காலேஜ் போகாமல் சீனுவை பேங்கிற்கு அழைத்து வந்து அவனுக்காக லோன் ஏற்பாடு செய்திருப்பதை சொல்கிறாள். பிறகு தனது அம்மாவின் இன்சூரன்ஸ் பணத்தை தூக்கி கொடுத்து உனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டும் என்று சொல்லி துணி கடை வைக்க சொல்கிறாள். இருவரும் சேர்ந்து ஒரு இடத்தை தேடி பிடித்து துணி கடை வைக்கின்றனர்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்த மாயா வாங்க துணி எடுக்க போகலாம் என்று அடம்பிடித்து எல்லாரையும் கடைக்கு அழைத்து வர மணி டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் கடையை பார்த்து மணி என் பேர்ல கடையா அப்போ நல்லா தான் இருக்கும் என்று சொல்லி உள்ளே போக அந்த கடைக்கு ஓனர் சீனு தான் என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. அவன் மாயா தான் பணத்தை கொடுத்து கடை வைக்க சொன்னதாக சொல்ல அதை கேட்டு மணி உட்பட எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Karthigai Deepam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment