/indian-express-tamil/media/media_files/2025/06/21/kayal-serial-copycast-2025-06-21-15-47-56.jpg)
சின்னத்திரையில் சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் மற்ற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலம் அறிமுகமான பல நட்சத்திரங்கள் தற்போது சன்டிவி சீரியல்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தான் கயல். ஜீ தமிழ் சீரியலில் வில்லியாக நடித்திருந்த சைத்ரா ரெட்டி இந்த சீரியலில் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார்.
அதேபோல் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த நடிகர் சஞ்சீவ் இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். வழக்கமாக குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் கயல் சீரியல் முன்னணியில் இருந்து வருகிறது. இதில் உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரகடரில் நடித்து வரும் நிலையில், வடிவுக்கரசி, சித்ரா லட்சுமணன், ராகுல் ரவி உள்ளிட்டோர் கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளனர்.
சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் கயல், சீரியலில் அவ்வப்போது திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட காட்சிகளை பயன்படுத்தி வருவது கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. கிரீடம் படத்தில் அஜித், த்ரிஷா இருவரும் வாட்டர் டேங்க உள்ளே அமர்ந்து பேசுவது, இதை பைப் வழியாக வீட்டில் இருக்கும் அனைவரும் கேட்டுக்கொண்டு இருப்பது காட்சியை அப்படியே இந்த கயல் சீரியலில் சைத்ராவும் சஞ்சீவும், வாட்டர் டேங்க் உள்ளே அமர்ந்து பேசுவது போன்று காட்சி அமைத்திருந்தனர்.
இப்படி பல படங்களில் இடம்பெற்ற முக்கிய காட்சிகளை சீரியலில் காட்சி படுத்தி வரும் இந்த கயல் சீரியல் குழு தற்போது பிச்சைக்காரன் படத்தில் கை வைத்துள்ளது. பிச்சைக்காரன் படத்தில், ஹீரோயின், ஸ்கூட்டியில் செல்லும்போது தவறுதலாக ஒரு காரில் மோதி விடுவார். அதற்காக மன்னிப்பு கேட்டாலும், அந்த காரின் ஓனர் ஹீரோயினை தரக்குறைவாக பேசிவிடுவார். இதை பார்த்த விஜய் ஆண்டனி அந்த கார் ஓனரை நோஸ்கட் செய்யும் வகையில் பேசியிருப்பார். இந்த காட்சி இப்போது டிவியில் பார்த்தால் கூட ரசிக்கும்படியாக இருக்கும். அந்த அளவிற்கு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற காட்சி.
ஏன் டா இதுக்கு ஒரு முடிவு இல்லையா? pic.twitter.com/KBJqr06gPX
— DR. MUTHUPANDI 🔥🔥🔥 (@EkalavyaMa) June 20, 2025
இந்த காட்சியை அப்படியே கயல் சீரியலில் ரீ-ஷூட் செய்துள்ளனர். இந்த காட்சி அதில் வருமு் வசனம் என அனைத்துமே அப்படியே இருந்தாலும் ஒரே ஒரு வித்தியாசமாக, பிச்சைக்காரன் படத்தில் ஹீரோயின் மட்டும் ஸ்கூட்டியில் வருவார். ஆனால் கயல் சீரியலில் சைத்ராவுடன் சஞ்சீவும் சேர்த்து வருவார். இது ஒன்றை தவிர மற்ற அனைத்துமே அப்படியே எடுத்து வைத்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.