சன்டிவியின் கயல் சீரியலில் எழில் கயலை திருமணம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று கயல். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் ஒளிபரப்பை தொடங்கியது முதல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் மனதிலும் இடம பிடித்துள்ள கயல் சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குடும்பத்தின் மூத்த பெண் தனது குடும்பத்தை கரை சேர்க்க போராடுவதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் நாள் தோறும் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் கயலை எழில் உருகி உருகி காதலிக்க, அவரின் பிரச்சனைகள் பலவற்றை தீர்ப்பதற்கு எழில் உதவி செய்தாலும் கயல் தனது குடும்ப சூழல் காரணமாக எழிலின் காதலை ஏற்க மறுக்கிறார். மேலும் தான் எழிலை ஒரு நண்பராகத்தான் பார்ப்பதாக சொல்லிவிடுகிறார். ஒரு கட்டத்தில் எழில் மீது கயலுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனாலும் தனது காதலை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்து விடுகிறார்.
Advertisment
Advertisements
இந் நேரத்தில் எழிலின் திருமணம் முடிவாகிறது. கயல் காதலை ஏற்றுக்கொள்ளாததால் எழில் ஆர்த்தியை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், எழில் ஆர்த்தியை திருமணம் செய்துகொள்வாரா அல்லது கயலை திருமணம் செய்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனிடையே தற்போது கயல் சீரியலில் எழில் அடித்த ட்விஸ்ட் இணைதய்தில் வைரலாகி வருகிறது.
மணமேடலையில் ஆர்த்தி பக்கத்தில் அமர்ந்திருக்கும் எழில், தாலி கட்டும் சமயத்தில் ஆர்த்தி அருகில் இருக்கும் கயல் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சியடைகின்றனர். தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், கயல் எழிலை ஏற்றுக் கொள்வாரா? எழிலின் அம்மா என்ன செய்யப் போகிறார்? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“