Tamil Actress Devayani New Serial : கடந்த 1995-ம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தேவயானி. அதனைத் தொடர்ந்து கல்லூரி வாசல், காதல்கோட்டை, சூரிய வம்சம், பாரதி, ப்ரன்ஸ், உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழந்த இவர், காதல்கோட்டை, சூரிய வம்சம், பாரதி ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் விருதை வென்றுள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் தேவயானி, கடைசியாக 2018-ம் ஆண்டு வெளியான ஸ்ட்ராபரி படத்தில் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் முன்னணி இடத்தை பிடித்த தேவயானி கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சன்டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார். தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற சீரியலில் நடிகை தேவயானியுடன் இணைந்து தீபா வெங்கட், அபிஷேக், ஈஸ்வரமூர்த்தி, திரு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலங்கள் சீரியல் 6 வருடங்களுக்கும் மேல் ஒளிபரப்பாகி பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, மஞ்சள் மகிமை, கொடி முல்லை, முத்தாரம், ராசாத்தி ஆகிய தொடர்களில் நடித்து சின்னத்திரையிரலும் வரவேற்பை பெற்றார்.
View this post on Instagram
இந்நிலையில், தற்போது 2 வருடங்கள் கழித்து தேவயானி மீண்டும் ஒரு புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். புது புது அர்த்தங்கள் என்று தலைப்புடன் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில், சீரியலில் பாஸ்கராக தேவயானியுடன் நடித்த அபிஷேக், இந்த புதிய சீரியலிலும் நடிக்கிறார். இந்த சீரியலுக்கான பட பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சீரியலில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.