scorecardresearch

எதிர்பார்க்காத வரவேற்பு… நெகிழ்ச்சியில் திளைக்கும் பிரபல சீரியல் நடிகை – வைரல் வீடியோ

Tamil Serial Rating : இவரின் உண்மையான பெயர் சுஜிதா என்றாலும் கூட இவர் வெளியில் செல்லும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சேனலில் இவரின் கேரக்டர் பெயரான தனம் என்றே சொல்லி அழைத்து வருகினறனர்.

எதிர்பார்க்காத வரவேற்பு… நெகிழ்ச்சியில் திளைக்கும் பிரபல சீரியல் நடிகை – வைரல் வீடியோ

Tamil Serial Actress Sujitha Dhanush Viral Video : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சுஜிதா தனுஷ். குழந்தையில் இருந்தே சினிமாத்துறையில் நடித்து வரும் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது இந்த சீரியல் தான்

சீரியல் மட்டுமல்லாது இயக்கத்திலும் ஆர்வம் காட்டும் சுஜிதா சமீபத்தில் நடிகை ஹன்சிகாவை வைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கியிருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நாளுக்கு நாள் இவர்களுக்கு உண்டான ஃபாலோவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மேலும் கதைகேளு கதைகேளு என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதில் அவ்வப்போது ஜாலியான டான்ஸ் மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இவரின் யூடியூப் சேனலும் பெரும் பிரபலம். தற்போது சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவரின் உண்மையான பெயர் சுஜிதா என்றாலும் கூட இவர் வெளியில் செல்லும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சேனலில் இவரின் கேரக்டர் பெயரான தனம் என்றே சொல்லி அழைத்து வருகினறனர். தற்போது மயிலாடுதுறைக்கு சென்றுள்ள இவருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்துள்ளனர்.

சினிமாவை காட்டியிலும் சீரியல் நடிகைகளுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வரும் நிலையில், தமிழ் சீரியலின் முன்னணி நடிகையான சுஜிதாவுக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு மரியாதை மற்றும் அன்பு மயிலாடுதுறை மக்களிடம் இருந்து ஒரு நாள் பயணம் ஆனால் அது மறக்க முடியாதது  என்று சுஜிதா இணையத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial leading actress sujitha dhanush fans respect