Advertisment

மீண்டும் மகா சங்கமத்தில் இணைந்த பாக்கியலட்சுமி சீரியல்: காரணம் இதுதானா?

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமி சீரயல் மகா சங்கமத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
baakiya pandian

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு ஏற்றார்போல் சின்னத்திரையிலும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அவ்வப்போது பல சீரியல்கள் முடிவதும், புதிய சீரியல்கள் ஒளிபரப்பை தொடங்குவதும் வழக்கமாகி வருகிறது. இதன் காரணமாக சின்னத்திரை ரசிகர்களும் தங்களது முக்கிய பொழுது போக்காக சீரியல்களை பார்த்து வருகின்றனர்.

Advertisment

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது வாரத்தின் 7 நாட்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், வார இறுதியில் முக்கிய சீரியல்களில் ஒன்று, பரபரபப்பான திருப்பங்களுடன் 2 அல்லது 3 மணி நேரம் ஒளிபரப்புவது, 2 சீரியல்களை இணைந்து மகா சங்கமம் என்று ஒளிபரப்புவது என சின்னத்திரையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முயற்சிகளுக்கு ரசிகர்களும் தங்களது ஆதரவை கொடுத்து வருவதால், குறிப்பிட்ட சில சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகின்றன. இதில் குறிப்பாக விஜய் டிவி – சன்டிவி இடையே டி.ஆர்.பி மோதல் ஏற்படுவது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இந்த டி.ஆர்.பி மோதலை சமாளிக்கும் வகையில், அவ்வப்போது மகா சங்கமம் எபிசோட்டை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் முக்கிய சீரியல்கள்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 – பாக்கியலட்சுமி சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி இறந்துவிட்டதால் சீரியல் குறித்து நெகடீவ் கமெண்ட்ஸ் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மகா சங்கமத்தில் இணைந்து கதையை வேறு பக்கம் நகர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியனின் பிறந்தநாள் வருகிறது, அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மகா சங்கமம் நடக்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே இந்த இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் நடந்துள்ள நிலையில், தற்போது 2-வது முறையாக மீண்டும் மகா சங்கமத்தில் இரு சீரியல்களும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment