Advertisment

காவியா கேரக்டர் நடிகை திடீர் விலகல் : இந்திரா சீரியலில் பிரபல நடிகை ரீ-என்ட்ரி

ஜீ தமிழின் இந்திரா சீரியலில் காவியா கேரக்டரில் நடித்து வந்த நடிகை விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Indra Serial Zee

இந்திரா சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இந்திரா, இந்த சீரியலில் கௌதம் என்ற கதாபாத்திரத்தில் அக்ஷய் கமல் நடிக்க நாயகியாக இந்திரா என்ற கதாபாத்திரத்தில் பௌசி நடித்து வருகிறார்.

Advertisment

மேலும் இந்திராவின் அக்காவாக காவியா என்ற கதாபாத்திரத்தில் ஜீவி டிம்பிள் நடித்து வந்தார். இதனிடையே தற்போது நடிகை சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக காவியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை தாட்சாயிணி நடிக்க தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்துள்ள இவர் தற்போது இதயம் சீரியலில் லதா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது இவர் இந்திரா சீரியலிலும் காவியாவாக நடிக்க தொடங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவியாவின் குழந்தையை சுற்றியே தற்போது இந்திரா சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment