Advertisment

புதுவரவாக மல்லி என்ட்ரி : இனியா, மிஸ்டர் மனைவி சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் மாற்றம்

சன் டிவியில் மல்லி சீரியல் புதிதாக என்டரி ஆக உள்ளதால், ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த 2 முக்கிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Malli Serial Suntv

மல்லி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன் டிவியில் புதிய சீரியல் ஒன்று என்ட்ரி ஆக உள்ளதால், மிஸ்டர் மனைவி மற்றும் இனியா ஆகிய இரண்டு சீரியல்களில் ஒளிபரப்பு நேர அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,

Advertisment

இந்திய அளவில் பிரபலமான டிவி சேனல்களில் ஒன்றான சன். டிவியில், வாரம் முழுவதும் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது, குறிப்பாக காலை 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவி தமிழ் ரசிகர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.

குறிப்பாக வார நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களையும் சேர்த்து வாரத்தின் 7 நாட்களும் சன்டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆனந்த ராகம், சுந்தரி, கயல், எதிர்நீச்சல், அன்பே வா உள்ளிட்ட ப்ரைம் டைம் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று, டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முக்கிய இடங்களை பெற்று வருகிறது. அதேபோல் ஒரு சீரியல் முடிவதும் அடுத்து புதிய சீரியல் தொடங்குவது சன் டிவியில் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்று.

அந்த வகையில் தற்போது ஒரு சில புதிய சீரியல்கள் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில்,  ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த 2 பிரைம் டைம் சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தை மாற்றம் செய்துள்ளனர். அதன்படி ஆல்யா மானசா நடித்து வரும் இனியா மற்றும் மிஸ்டர் மனைவி ஆகிய இரண்டு சீரியல்கள் ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் இருந்து அரைமணி நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல்கள் வாரத்தில் ஏழு நாட்கள் ஒளிபரப்பாகும்.

சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இனியா சீரியல் தற்போது இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி சீரியல் இனி 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும். புதிதாக ஒளிபரப்பை தொடங்க உள்ள மல்லி சீரியல் காரணமாக இந்த இரு சீரியல்களில் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

நிகிதா ரமேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மல்லி சீரியல் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரவு 9:00 மணிக்கான பிரைம் ஸ்லாட்டில் சூப்பர்ஹிட் சீரியலான எதிர்நீச்சல் ஒளிபரப்பாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment