scorecardresearch

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்: யார், யார் நடிக்கிறாங்க? அவங்க நிஜப் பெயர் என்ன?

4 பெண் குழந்தைகளுடன் ஒரு பெண் தனிமையில் வாழும்போது சந்திக்கும் முக்கிய பிரச்னைகள் தான் மீனாட்சி பொண்ணுங்க

Meenakshi Ponnunga
மீனாட்சி பொண்ணுங்க அர்ச்சனா

சினிமாவை விட தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை தக்க வைத்துக்கொள்ள டிவி சேனல்களும் அவ்வப்போது புதிய சீரியல்களை தொடங்கி வருகின்றன. எத்தனை சீரியல்கள் வந்தாலும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கிலும் கணிசமாக ரேட்டிங்கை பெற்று வருகிறது.

அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் குறுகிய காலத்தில் வலிமையாக இடம் பிடித்த சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 4 பெண் குழந்தைகளுடன் ஒரு பெண் தனிமையில் வாழும்போது சந்திக்கும் முக்கிய பிரச்னைகளை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் பழம்பெரும் நடிகை அர்ச்சனா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 250 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் உண்மையாக பெயர் மற்றும் விபரங்களை பார்ப்போம்.

மீனாட்சி – அர்ச்சனா

80-90 களில் தமிழ் தெலுங்கில் பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை அர்ச்சனா 2 முறை தேசிய விருதை வென்றுள்ளார். தற்போது மீனாட்சி பொண்ணுங்க சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆகியுள்ளார்.

சௌந்தர்யா ரெட்டிகாயத்ரி

சக்தி – மோக்ஷிதா பாய் (2022) இப்போது சௌந்தர்யா ரெட்டி

தொடக்கத்தில் சக்தி கேரக்டரில் நடித்த வந்த நடிகை மோக்ஷிதா திடிரென விலகியதால் அவருக்கு பதில் சௌந்தர்யா ரெட்டி நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னட தொடர்களில் நடித்து வந்த சௌந்தர்யா தற்போது “மீனாட்சி பொண்ணுங்க” தொடர் மூலம் தமிழில் என்டரி ஆகியுள்ளார்.

யமுனா – காயத்ரி

தமிழ் சின்னத்திரையின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான காயத்ரி. ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆகிய தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது மீனாட்சியின் மூத்த மகளாக  நடித்து வருகிறார்.

பிரணிகா தக்ஷுதீபா

சாந்தா – தீபா

“மெட்டி ஒளி” சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான தீபா சங்கர் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். பல படங்களில் நடித்துள்ள இவர் இந்த தொடரில் சாந்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஆர்யன் – வெற்றி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் எனும் கேரக்டர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஆர்யன் தற்போது “மீனாட்சி பொண்ணுங்க” எனும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆர்யன்

துர்க்கா –  பிரணிகா தக்ஷு

குறும்படம் மட்டும் வீடியோ தொடர் மூலம் அறிமுகமான இவர் விஜய் டிவியின் பாவம் கணேசன் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது “மீனாட்சி பொண்ணுங்க” சீரியலில் நடித்து வருகிறார்.  

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial meenakshi ponnunga serial cast details update in tamil