/tamil-ie/media/media_files/uploads/2021/09/Mouna-Ragam.jpg)
Tamil Serial Mouna Ragam Update : இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருவது சீரியல். காலை முதல் நள்ளிரவு வரை ஒரு சில தொலைக்காடசிகளில் தொடர்ச்சியாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில பல சீரியல்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும். அந்த சீரியல் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சில சீரியல்களிர் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் அல்லது நடிகை திடீரென மாற்றப்படுவது தொடர்ந்து வருகிறது. இதில் புதிதாக வருபவர் ரசிகர்களின் மனதை கவர்ந்தாரா என்பது என்பது மில்லியன் டாலர் கேளவீயாக உள்ளது. ஆனாலும் சீரியல் கதாப்பாத்திரங்கள் மாற்றம் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மனம் கவர்ந்த மௌனராகம் 2 சீரியலில் தற்போது முக்கிய நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.
விஜய் டிவி சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று மௌனராகம் 2. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த சீரியல் படப்பிடிப்பு முழுவதும் கேளராவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு காட்சிகளுக்குள்ளும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் கொண்ட இந்த சீரியல் நாள்தோறும் பெருமு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தறபோது இந்த சீரியலில் வருண் – தருண் என்ற கதாப்பாத்திரங்களின் அப்பாவாக மனோகரன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மகேஷ்வரன் மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக நடிகர் கே கே மேனன் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து கே.கே.மேன்ன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.