New Update
/indian-express-tamil/media/media_files/J9ub1rGTGa5HV4QzUoCT.jpg)
சன் டிவி சீரியல்களில் நடித்து வந்த வாரிசு நடிகை ஒருவர் தற்போது ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்புவதும், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும் தொடர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல்களில், மற்ற சேனல்களில் நடித்த நடிகர் நடிகைள், வேறொரு சேனலின் புதிய சீரியலில் நடிப்பது வழக்கமாக நடந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது சன்.டிவி சீரியலில் நடித்து வந்த வாரிசு நடிகை ஒருவர் தற்போது ஜீ தமிழ் சீரியலில் கமிட் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவில், நடிகர் இயக்குனர், கதாசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வரும் லிவிங்ஸ்டனின் மகள், ஜோவிதா. சன்டிவியின் பூவே உனக்காக சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக இவர், அதனைத் தொடர்ந்து அருவி சீரியலில் நடித்திருந்தார்.
இந்த இரு சீரியல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் அருவி சீரியல் முடிவடைந்தது. இதன் பிறகு ஜோவிதா எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார். ஜீ தமிழின் புதிதாக ஒளிபரப்பாக உள்ள மௌனம் பேசியதே சீரியலில் நாயகியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் நடித்துள்ளார்.
இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த சீரியலில் நாயகனாக, விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த நடிகர் சத்யா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் பெயரை சீரியலுக்கு பயன்படுத்தி வரும் விஜய் டிவிக்கு போட்டியாக தற்போது, ஜீ தமிழ் சீரியலில் திரைப்படத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், ப்ரமோ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.