New Update
/indian-express-tamil/media/media_files/pQ9VFq5UtLCg8jxmlmBR.jpg)
தமிழ் சீரியல் நடிகை ஷோபனா
சின்னத்திரை சீரியல் நடிகை ஒருவர் தனக்கு தானே தாலி கட்டிக்கொள்ளும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சீரியல் நடிகை ஷோபனா
விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனக்கு தானே தாலி கட்டிக்கொள்ளும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் வழங்குவதில் விஜய் டிவிக்கு முக்கிய இடம் உண்டு. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நிகழ்ச்சிகள் அல்லாமல் நட்சத்திரங்களில் தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகவது வழக்கம்.
அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு தானே தாலி கட்டிக்கொள்ளும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று முத்தழகு. தினசரி உணவுக்கெ கஷ்டப்படும் நாயகி பரம்பரை பணக்காரனான நாயகனை திருமணம் செய்துகொள்கிறார். அதன்பிறகு இவர்கள் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்த சீரியல் நகர்கிறது.
தினசரி மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், டிக்-டாக் மூலம் பிரலமான ஷோபனா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்கிறார். அவர்களுடன் லஷ்மி வாசுதேவன், ஷாலினி ராஜன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் திருமண காட்சி ஒன்றுக்கு நாயகன் தாலி கட்டும் முன்பே நாயகி தாலிக்கு முடிச்சு போட்டு கழுத்தில் மாட்டிக்கொள்ளும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் டிவி சீரியல் திருமணம் இப்படித்தான் நடக்கிறதா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.