முத்துராசுவை சுட்டுக் கொன்றது காயத்ரியா? நல்லா வைக்கிறாங்கையா சஸ்பென்ஸு..!

Vijay TV Serial Tamil News : விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்தரசனை சுட்டது யார் என்பது குறித்து பெரும் விவாதம் ஏற்பட்டுள்ளது.

Naam Iruvar Namakku Iruvar Serial : கொரோனா காலகட்டத்தால் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், மக்கள் அனைவரும் தங்களது கவனத்தை சீரியல் திருப்பியுள்ளனர். இதனால் ரசிகர்களை கவரும் வகையில் சீரியல் இயக்குநர்களும் கதையை சுவாரஸ்யமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக பல புக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் கடச்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திரைப்படங்களில் குறைந்தது ஒரு கொலை அல்லது மர்மங்கள் ஏதேனும் நடந்தால், அடுத்த சில நிமிடங்களில் அதை செய்த்து யார் எதற்காக செய்தார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிடும். ஆனால் சீரியல் அப்படி இல்லை. சீரியல் எபிசோடுகளாக சில ஆண்டுகள் ஒளிபரப்பாகும் என்பதால், அதில் ஒரு மர்மமான சம்பவம் நிகழும்போது, அதை யார் எதற்காக செய்தார் என்பது தெரிய குறிப்பிட்ட சில வாரங்கள் ஆகலாம். அதுவரை ரசிகர்கள் அந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தங்களது யூகங்களை பகிர்ந்து வருவார்கள்.  தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களும் இதே நிலையில் தான் உள்ளனர்.

மாயனின் கடைசித் தங்கை ஐஸ்வர்யாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட முந்தரசன் தொடர்ந்து தொலைலை கொடுத்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஐஸ்வர்யாவின் ஆபாசப் படங்களைக் எடுத்து வைத்துக்கொண்டு அதை காட்டி மிரட்டி வந்தார். இதனால் சீரியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் உயர்வை சந்தித்து வந்தது. இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்தை இந்த சீரியலின் இயக்குநர் கடந்த வாரம் வெளியிட்ட ப்ரமோவில், முத்தரசனை சுடுவது போன்ற காட்சிகளை வைத்து மேலும் பரபரப்பை கூட்டியுள்ளார்.

முத்தரசனை சுட்டது சந்தோஷம் என்றாலும், அவரை சுட்டது யார் என்பது குறித்து ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொள்கின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த சீரியல் நடிகர் நடிகைகளின் சமூக வலைதள பக்கத்தில், முத்தரசனை சுட்டது யார் என்பது தொடர்பான கேள்விகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த கேள்விக்கான பதில் இந்த வார எபிசோட்டில் கிடைக்காது என்பதற்கு இந்த வார புரோமோவே பதில் சொல்லிவிட்டது.

இதன்பிறகு இந்த வழக்கை விசாரிப்பதற்காக புதிதாக ஒரு போலீஸ் கேரக்டர் அறிமுகமாகி அடுத்த சில வாரங்களுக்கு ஜவ்வாக இழுத்து செல்வார்கள். இது ஒருபுறம் இருக்க, இன்றைய எபிசோட்டில், தன் மகன் முத்துராசுவைக் காணோம் என அவரது அம்மா ஊரைக் கூட்ட, யாரோ ஒருவர் காலிங்பெல்லை அடித்து ஐஸ்வர்யாவின் ஆபாச வீடியோ உள்ள செல்போனை வாசலில் வைத்து விட்டுச் சென்று விடுகின்றனர். இதில் இருந்து ஐஸ்வர்யா இந்த சம்பவத்தை செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஐஸ்வர்யா தான் முத்துராசுவைக் கொன்றார் என்றால், இப்படி செல்போனைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் வைத்து காலிங்பெல்லை அடிக்க வாய்ப்பில்லை.

தொடர்ந்து முத்துராசுவின் அம்மா தன் மகனைக் காணவில்லை என சண்டை போடும் போது, மாயன் தான் மனதிற்குள் அதிகம் பேசுகிறார். இதனால் அவர் முத்துராசுவைக் சுட்டிருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம். கத்தியும் அதே மாதிரி தான். இதனால் மீதம் இருக்கும் ஐஸ்வர்யாவின் அம்மா, அக்கா சரண்யா மற்றும் மகா தான். இதில் இந்த சம்பவத்திற்கும் மகாவுக்கு தான் அதிக தொடர்வு இருப்பது போல காட்சிகள் உள்ளது. இதேபோல், காயத்ரி தான் முத்துராசுவைக் கொன்றிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனது தங்கையின் வாழ்க்கை முத்துராசுவிடம் சிக்கிக் கொண்டதே என்ற கோபத்தில் இருந்த இவர்,  முத்துராசுவைத் தானே கட்டியிருக்கலாம் என்று சிந்தித்து வந்தார். இதனால் தான் அவர் மீது சந்தேகம் வலுக்கிறது.

இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், முத்தரசு ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பிறகும், காயத்ரியை தொடர்ந்து தொல்லை செய்து வந்தது சீரியல் பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இதனால் அவர் தொல்லை தாங்க முடியாமல் ஐஸ்வர்யாவை காப்பாற்றும் நோக்கத்தில் இப்படி செய்திருக்கலாம்.  மேலும் ஐஸ்வர்யா காலிங்பெல் அடித்ததும் கதவைத் திறந்து, அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது, இதற்குத் தான் காத்திருந்தேன் என்பது மாதிரி வந்து பேசுகிறார் காயத்ரி.

மேலும் செல்போனை எடுத்துக் கொடுத்தவர்களுக்கு நன்றி என என ஐஸ்வர்யா அழுகும் காட்சிகளில், மாயன், கத்தி, ஐஸ்வர்யாவின்அம்மா, சரண்யா என எல்லோரும் ஏதேதோ சமாதானம் சொல்ல, காயத்ரி மட்டும் அமைதியாக நிற்கிறார். இதில் இருந்தே அவர் மீது சந்தேகம் வலுக்கிறது.  மேலும் ஐஸ்வர்யா அந்த செல்போனை என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே காயத்ரி அதை தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார். இதனால் அவர் தான் முத்தரசனை சுட்டிருக்க வேண்டும் என்பது ஓரளவிற்கு உறுதியாக கூறலாம் இந்த சம்பவம் எந்த சூழ்நிலையில் நடந்தது ஏன் நடந்தது என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள வரும் வாரங்களில் தயாராக இருப்போம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial naam iruvar namakku iruvar serial twist mutharasan murder

Next Story
அப்போ சர்கார்… இப்போ பீஸ்ட்… மீண்டும் சர்ச்சையில் விஜய்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express