Advertisment

கொரோனாவை தடுக்க வரும் சக்தி : புதிய கதைக்களத்துடன் நாகினி சீசன் 6

கலர்ஸ் தமிழில் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நாகினி சீரயிலின் 6-வது சீசன் இன்று முதல் தொடங்குகிறது.

author-image
WebDesk
New Update
Nagini Serial 6

நாகினி சீசன் 6

கலர்ஸ் தமிழ் டிவியின் நாகினி சீரியல் 6-வது சீசனின் புதிய அத்தியாயங்களை இன்று முதல் ஒளிபரப்புகிறது. தேஜஸ்வி பிரகாஷ், சிம்பா நாக்பால் மற்றும் ஊர்வசி தோலக்கியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Advertisment

நாகினி சீசன் 6 முந்தைய சீசன்களைப் போல காதல்-பழிவாங்கும் கதை அல்லாமல் புதிய கான்செப்ட்டைக் கொண்டுள்ளது. நாகினி 6 இன் கதைக்களம் கோவிட்-19 தொற்றுநோயால் ஈர்க்கப்பட்டது, நாகின்கள் உயிரியல் போரிலிருந்து நாட்டைக் காப்பாற்ற போராடும் சூப்பர் ஹீரோக்களாக சிற்றறிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஏக்தா கபூர் தயாரித்த சீரியல் நாகினி 6, சிறந்த கிராஃபிக் நாடகத்துடன் கூடிய இயற்கைக்கு அப்பாற்பட்ட கதைக்களம் கொண்டது, இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேஜஸ்வினி நடித்த நாகினி, தொற்றுநோயைப் பரப்பி பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க எதிரி நாடான சிங்கிஸ்தானுடன் கூட்டு சேர்ந்த நாட்டின் துரோகிகளை வேட்டையாடுகிறது.

Nagini 6

இதனால் இந்த சீரியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாகினி 6 இன் எதிர்காலக் கதையில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிம் தொற்றிக்கொண்டுள்ளது. நாகினி 6 இன் புதிய எபிசோட்களை 16 அக்டோபர்'23, திங்கட்கிழமை, 8:30 மணிக்கு, கலர்ஸ் தமிழிலும், ஜியோ சினிமாவிலும் டிஜிட்டல் முறையில் பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment