Tamil Serial Namma Madurai Sisters Update In tamil : கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சாயா சிங்-க்கு பதிலாக நடிகை ஸ்ருதி லட்சுமி நடிக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
தமிழில் சீரியல் ஒளிபரப்புவதில் வளர்ந்து வரும் சேனலான கலர்ஸ் தமிழில் தற்போது ரசிகர்களுக்கு பிடித்தமான சில சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நம்ம மதுரை சிஸ்டர்ஸ்.
திருடா திருடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை நடிகை சாயா சிங் நான்கு சகோதரிகள் மூத்தவரான இந்திராணி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். பல வருடங்கள் கடுமையாக உழைத்த அவரது உழைப்பின் பலனாக அன்னம் அங்காடி என்ற ஒரு பல்பொருள் அங்காடியைத் திறந்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் இனி சாயா சிங் நடித்த இந்திராணி என்ற முக்கிய கேரக்டரில் அவருக்கு பதிலாக பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி லட்சுமி நடிக்கவுள்ளதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரபல மலையாள சீரியலான போக்குவேயில் இஷா அரவிந்த் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ருதி லட்சுமி, சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதை வென்றவர். தமிழில் நீ வருவாயா என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.
இது குறித்து ஸ்ருதி லட்சுமி கூறுகையில், இந்த கேரக்டரை பற்றி நான் கேள்விப்பட்ட தருணத்தில், இது எனது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். கேரக்டரில் ஆழம் என்னை மிகவும் ஈர்த்தது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். படைப்பாளிகளின் நோக்கத்தின்படி இந்திராணியின் உண்மையான கேரக்டரை பிரதிபலிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
நம்ம மதுரை சிஸ்டர்ஸ் தொடரில், இந்திராணி, மேகலா, புவனா மற்றும் காவ்யா ஆகிய நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை அடிப்படையான வைத்து திரைக்கரை அமைக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே அனாதையாகி, பல கட்டமாக வாழ்க்கையில் போராடி இறுதியில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே கதை. குடும்ப செண்டிமெண்டுடன் சகோதரிகளின் பாசத்திற்கு முக்கியத்துவம் உள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“