தமிழ் சின்னத்திரையில், விஜய டிவிய சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் நாளுக்கு நாள் சீரியல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் ஒரு சீரியல் இறுதிகட்டத்தை நெருங்கும்போதே அடுத்து சீரியலுக்கான ப்ரமோ வெளியாகிவிடும்.
மேலும் நன்றாக சென்றுகொண்டிருக்கும் சீரியல்களில் அடிக்கடி கேரக்டர் மாற்றம் நடைபெறுவது வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு. விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் ஒரு சீரியலில் திடீரென கேரக்டர் மாற்றம் நடந்நதால், கதையின் விறுவிறுப்பு காரணமாக ரசிகர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்.
ஆனால் ரசிர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியலில் ரசிகர் மனம் கவர்ந்த ஒரு கேரக்டர் மாற்றம் நடைபெறும் போது அது ஒட்டுமொத்த சீரியலுக்கும் சரிவை ஏற்படுத்தும். ஆனாலும் சீரியலுக்கான வரவேற்பு என்பது குறையாமல் இருக்கும் அந்த வகையில் விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஜல்சா என்ற வடமொழி சீரியலின் ரீமேக்காகும். அக்ரிமெண்ட் முறையில் திருமணம் செய்துகொள்ளும் கார்ததிக் மீனாட்சி தம்பதியின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. .ளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளஇந்த சீரியலில் இருந்து நடிகை ஷெரின் விலகியுள்ளார்.
இந்த தொடரில் திவ்யா என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஷெரின் தற்போது விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக லைலா என்பவர் இந்த கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் அவர் விலகலுக்காக காரணம் என்றும் வெளியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“