விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் நடித்து வந்த நடிகை, திடீரென அந்த சீரியலில் இருந்து விலகியுளள் நிலையில், அவருக்கு பதிலாக புது நடிகை ஒருவர் இன்றைய எபிசொட்டில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி டி.ஆர்.பியில் வெற்றி கண்ட விஜய் டிவி சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சற்று பின்தங்கியுள்ளது. ஆனாலும், அவ்வப்போது புதிய சீரியல் ஒளிபரப்புவது, பழைய சீரியல்களின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக, திரைக்கதையில் மாற்றம் செய்வது என பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்பத்தில் டப்பிங் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த விஜய் டிவி தற்போது நேரடி தமிழ் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.
விஜய் டிவி சீரியல்களில் நடித்த பல நட்சத்திரங்கள் தற்போது சினிமாவில் ஸ்டார்களாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது நடித்து வரும் நடிகர் நடிகைகளும் தங்களுக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இதனால் விஜய் டிவி சீரியல்களும் அதில் நடித்து வரும் நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தான் நீ நான் காதல்.
இந்தி சீரியலின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், லப்பர் பந்து படத்தில் தினேஷின் மனைவியாக சுவாசிகாவின் கணவர், பிரேம் ஜேக்கப் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷினி சுரேஷ் நடித்து வருகிறார். அதோடு ஹர்ஷிதா ஸ்ரீதாஸ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன், வி.ஜே.தன்ஷிக் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
இதில் ஹீரோவின் அக்கா அஞ்சலி கேரக்டரில் நடித்தவர் வி.ஜே.தன்ஷிக்.
வி.ஜே.தன்ஷிக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இலங்கையை சேர்ந்த தனுஷிக் இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வந்த நிலையில், நண்பாகள் மூலமாக சென்னைக்கு வந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார். திடீரென்று இவர் விலகுவதற்கு காரணம் அவருடைய திருமணமா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதனிடையே அவருக்கு பதிலாக ஸ்வேதா என்பவர் அஞ்சலி கேரக்டரில் நடிக்க உள்ளார்.