Advertisment

எண்ட்ரி கொடுக்கும் புது நடிகர் : எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது வரவாக நடிகர் ஒருவர் எண்டரி கொடுக்க உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எண்ட்ரி கொடுக்கும் புது நடிகர் : எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய நடிகர் ஒருவர் எண்ட்ரி ஆக உள்ளார்.

Advertisment

தமிழ் தொலைக்காட்சிகளில் குடும்ப உறவுகள் குறித்து பல சீரியல்கள் வெளியானாலும், அதில் விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடித்து வரும் இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலுக்கு கிடைத்து வரும் பெரும் வரவேற்பால், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. குடும்ப உறவுகளை மையமாக வைத்தாலும், சீரியலில் ரொமான்ஸ் கட்சிகளுக்கு குறைவில்லாமல் உள்ளது. இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கும் நிலையில், கடைக்குட்டி கண்ணனுக்கு இதுவரை ஜோடி இல்லாமல் இருந்த்து. ஆனால் தற்போது இந்த கேரக்டருக்கும் ஜோடி ஏற்பாடு செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா என்ற அந்த கதாப்பாத்திரத்தில், நடித்து வந்த நடிகை வைஷாலி தனிகா தற்போது மாற்றப்பட்டு தீபிகா அந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த சீரியலில் தற்போது புதிதாக நடிகர் ஒருவர் எண்ட்ரி ஆகியுள்ளார். ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் அக்னி நட்சத்திரம் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் நடிகர் வசந்த் வசி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரீ கொடுக்க இருக்கிறாராம். இவர் கண்ணன் – ஐஸ்வர்யா ஜோடிக்கு வில்லனாக இறுக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment