Tamil serial news: சன் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி சீரியல்’, சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது.

கருப்பாக உள்ள சுந்தரியை மையமாக கதையமைக்கப்பட்ட இந்த சீரியலில், குடும்பத்தினரின் நிர்பந்தத்தால் ஹீரோ சுந்தரியை மணக்கிறார். பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவருடன் சேர்ந்து வாழ ஹீரோ விரும்பவில்லை. மேலும் தனது குடும்பத்தினர் யாரும் அறியாத வகையில் வேறொரு அழகா பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி இரண்டு திருமணங்களை செய்து கொண்ட சீரியலின் ஹீரோ எப்படி வில்லாமத்தானாக அவர்களை சமாளிக்கிறார் என்பதே தற்போது நடந்து வரும் கதை.

இந்த நிலையில், இந்த சீரியலில் சுந்தரியின் மாமா முருகன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மனோகர் கிருஷ்ணா வவிலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் சதீஷ் குமார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)