Tamil Serial Actress Myna Nandhini Viral Video : சமூக வலைதளங்களில் தற்போது பெரிய திரை நட்சத்திரங்களை விட சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்கள் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தங்கள் வைத்துள்ள யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகின்றனர். அப்படி பதிவெற்றப்படும் வீடியோக்கள் வலைதளங்களில் பெரும் வைரலாவது அனைவரும் அறிந்த ஒன்று.
Advertisment
அந்த வகையில், சின்னத்திரை நடிகை மைனா நந்தினி காதலர் தினத்தன்று நடந்த நிகழ்வை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துளார். தற்போது இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நந்தினி, மக்களின் மனதில் பெரும் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து, ஒரு சில படங்களில் நடித்த அவர், கடந்த 2019ம் ஆண்டு சீரியல் நடிகர் யோகேஷ்வரனை திருமணம் செய்துகொண்டார்.
தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இத்தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சமூகவலைதளத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கும் மைனா நந்தினி ‘மைனா விங்ஸ்’ என்று தனக்கென தனியாக யூடியூப சேனல் வைத்துள்ளார். அந்த சேனலில் ரோட் ட்ரிப், மேக்கப், சமையல் என பல சுவாரஸ்யமான வீடியோக்களை பதிவிட்டு வரும் நந்தினி, காதலர் தினத்தன்று தனது கணவன் தனக்கு சர்ப்ரைஸாக காதலர் தின பரிசு கொடுத்ததை வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் தொடக்கத்தில், கேக், டெடி பியர், துருவன் (இவர்களது மகன்)என பெயர் பொறித்த டாலர் என வரிசையாக நந்தினிக்கு கிப்ட் கொடுத்த யோகேஸ்வரன் தனது நெஞ்சில் மனைவியின் பெயரை பச்சைக் குத்தியிருப்பதையும் காட்டுகிறார். அதைப்பார்த்த மைனா நந்தினி அன்பில் ஆனந்தக் கண்ணீர் விட யோகேஷ்வரன் அவரை ஆறுதலாக பிடிக்கும் கட்சி வைலாகி வருகிறது.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"