/tamil-ie/media/media_files/uploads/2021/01/nakshtra.jpg)
கடந்த 2014-ம் ஆண்டு தந்தி டிவியில் ஒளிப்பான வாணவில் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை நக்ஷத்திரா, அதன்பிறகு சன்டிவில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
தொடர்ந்து, நாயகி, ரோஜா, மின்னலே, திருமகள், வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்து புகழ்பெற்ற இவர், மிஸ்டர் லோக்கல், இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும் போன்ற பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது ஹேய் சினாமிகா வஞ்சகன் ஆகிய படங்களில் நடித்து வரும் அவர் தனது வாழ்க்கை துணை பற்றிய அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் இன்ஸ்டாகிராமிற்கு முதல் முறையாக வந்தபொழுது, நண்பர்கள் மட்டும் தான். புதிய நண்பர்களை உருவாக்குவது மற்றும் உற்சாகத்தை எனது இந்த சிறிய உலகத்துடன் பகிர்ந்து கொள்வது என்பதே எனது வேலையாக இருந்தது. ஆனால் நான் நடிப்பு தொழிலில் ஈடுபட்ட போது எனது கணக்கு பொதுவானது. நீங்கள் அனைவரும் எனது சிறிய உலகத்தின் ஒரு அங்கமாக மாறினீர்கள்.
நாளுக்கு நாள் நீங்கள் எனக்குக் கொடுக்கும் அன்பு வளர்ந்து கொண்டே வருகிறது. அதற்கு நான் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தற்போது உங்களிடம் ஒரு முக்கியமான நபரை இன்று மாலை அறிமுகம் செய்ய இருக்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு "இவர்தான் ❤️ #NakshufoundherRagha" என்று கூறியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.