கண்களில் நீர் கோர்க்கிறது; மனசு வலிக்கிறது: ‘சித்தி’க்கு பிரியாவிடை கொடுக்கும் ரசிகர்கள்

Actress Radhika Twitt About Chiththi 2 serial : மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சித்தி 2 சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் அதிக வரவேற்பை பெற்ற வரும் சித்த -2வில் இருந்து விலகுவதாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

1980-90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. தொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டுவரை சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரின் மூலம் சின்னதிரையில் சீரியலுக்கு வந்த அவர், அந்த சீரியலின் மூலம் பெரும் ரசிகர்பட்டாளத்தை பெற்றார். 90- கிட்ஸ்க்கு மிக பிடித்தமான இந்த சீரியல் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

இந்த சீரியலுக்கு அப்போது கிடைத்த வரவேற்பை பெற்றதால், கொரோனா லாக்டவுன்காலத்தில் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றாத நிலையில், சித்தி சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது 22 வருடங்களுக்கு பிறகு இந்த சீரியலின் 2ம் பாகம் தயாராகி தற்போது ஒளிபராபாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ராதிகாவே இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அவருடன நிழல்கள்ரவி, பொன்வன்னன், பிரீத்தி சர்மா, என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த சீரியலை ராடன் மீடிய வொர்க்ஸ் மூலம் நடிகை ராதிகாவே தயாரித்து வருகிறார்.

தற்போது இந்த சீரியல் 230 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தவிர்க்க முடியாத காரணங்களால் சித்தி 2 சீரியலில் இருந்து விலகுகிறேன். இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழத்துக்கள்.  உங்களை பிரிந்து செல்வது மிகவும் கடினமான உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்” நான் வெளியேறும்போது மகிழ்ச்சியும் சோகமும் கலந்த கலவையான மனநிலையில் இருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னுடன் மிகச் சிறந்த மற்றும் கடின உழைப்பைக் கொடுத்து, கொடுத்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், சகநடிகர்களை விட்டுச்செல்வது வருத்தமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி கெவின், வெண்பா மற்றும் யஜினிக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், தனது ரசிகர்களுக்கும், அவர்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும், நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்து சீரியலை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த டவிட்டை தொடர்ந்து சித்தி 2 சீரியல் குழுவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  நடிகை ராதிகாவின் இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்டிவியில் சித்தி 2 சீரியலின் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியது ராதிகாவுக்கு பிடிக்காததால், அவர் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக ஒரு சிலரும், கடந்த வாரம் திடீர் அறிவிப்பை வெளியிட்ட ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  ராதிகாவின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து சமூக வளைதளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news actress radhika twitt about chithi 2 serial

Next Story
தேனு – அருள்.. இவங்க அலப்பறைய பார்த்து அப்பத்தாவே டென்ஷன் ஆயீடாங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X