அடுத்த சீரியல் ரெடி! ஆல்யா கொடுத்த ஹாட் அப்டேட்

விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தான் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தான் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial News, Alya Manasa Sanjeev

ஆல்யா மானஸா - சஞ்சீவ்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’ராஜா ராணி' சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் ஜோடி. அந்த சீரியல் மூலம் தொடங்கிய இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு முன்பு ஆல்யாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர் கர்ப்பமானதும் ஏற்றுக் கொண்டார்கள். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது.

Advertisment

தனது குழந்தையின் புகைப்படத்தை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை அடிக்கடி வைரலாகி வருவது வழக்கம். இந்நிலையில் ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தான் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை ராஜா ராணி சீரியலை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு சஞ்சீவ், 'என்ன பப்பு சஸ்பென்ஸ ஒடச்சுட்ட' என்று கமெண்ட் செய்தார். தற்போது இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: