சன் டிவியின் ஹிட் சீரியல் முடிகிறதா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை
“Anbe Vaa serial is not ending” - actress hema dayal insta post Tamil News: பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற செய்தி பரவி வந்த நிலையில், அது பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை ஹேமா தயாள்.
“Anbe Vaa serial is not ending” - actress hema dayal insta post Tamil News: பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற செய்தி பரவி வந்த நிலையில், அது பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை ஹேமா தயாள்.
Tamil serial news: சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னணி தொலைக்காட்சியாக சன் டிவி வலம் வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் 'அன்பே வா' சீரியலும் ஒன்று. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் வருண் - பூமிகா ஜோடி முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றனர்.
Advertisment
அன்பே வா சீரியல் டிஆர்பியில் டாப் 5ல் வருவதில்லை என்றாலும், ரசிகர்களிடையே பிரபலமான சீரியலாகவே உள்ளது. இதற்கு காரணம் பூமிகாவாக நடிக்கும் டெல்னா டேவிஸ் மற்றும் வருண் ரோலில் நடிக்கும் விராட் ஆகியோரை குறிப்பிட்டு கூறலாம். கெமிஸ்ட்ரியில் அசத்தும் இந்த ஜோடிக்கு நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Advertisment
Advertisements
தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற செய்தி இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் கடந்த சில தினங்களாக பரவி வந்தன.
இந்நிலையில், அன்பே வா சீரியல் நிறுத்தப்படபோவதில்லை என இந்த சீரியலில் அஸ்வினியாக நடிக்கும் நடிகை ஹேமா தயாள் தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் அன்பே வா சீரியல் பற்றிய வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்
இதோ அந்த பதிவு…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“