Azhagu : ஹை.. இந்த குட்டி சித்தியை சித்தீதீதீ...ன்னு கூப்பிடலாமா?
Azhagu Serial : திருநா ஒரு கல்யாணத்தோட நிற்காம நிவியை இழுத்துகிட்டு போயி கல்யாணம் செய்துக்கிட்டது.. இதை எல்லாம் தட்டிக் கேட்கற மாதிரி மல்லிகா சித்தி வந்து இறங்கி இருக்காங்க.
Azhagu Serial : திருநா ஒரு கல்யாணத்தோட நிற்காம நிவியை இழுத்துகிட்டு போயி கல்யாணம் செய்துக்கிட்டது.. இதை எல்லாம் தட்டிக் கேட்கற மாதிரி மல்லிகா சித்தி வந்து இறங்கி இருக்காங்க.
Tamil Serial News : சாரதா சித்தியை தெரியும்.. மல்லிகா சித்திய தெரியுமா?சித்தி 2 சீரியலில் ராதிகா சித்தி சாராதவா நடிச்சு இருப்பது உலகறியும். அதே சன் டிவியின் அழகு சீரியலில் குட்டி உருவத்தில் பழனிச்சாமி வாத்தியாரின் ரெண்டாவது சம்சாரமா நடிச்சு இருக்கும் இவங்க மல்லிகா சித்தி. மல்லிகா சித்தி கெட்டப்பே அசத்துது... வித்தியாசமான டிசைனில் காட்டன் புடவை, கெண்டைக்கால் தெரியற மாதிரி வித்தியாசமான புடவை கட்டு என்று பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.
சில்வர் நிறத்தில் காதில், கழுத்தில் நகைகள் இது இப்போதைய ஃபேஷன்தான் என்றாலும், இவரின் பழைய கெட்டப்புக்கு இதுவும் பொருந்தி நன்றாக இருக்கிறது. கெட்டப்பெல்லாம் சரி...மல்லிகாவுக்கு அழகு சீரியலில் என்ன வேலை என்று பார்த்தால், எப்போதும் அழகு கோயிலுக்கு போயிருக்கா.. கடைக்கு போயிருக்கா.. கடைசியா ரேவதி வரவே இல்லை என்றவுடன் ஊருக்கு போயிட்டான்னு சொல்லிகிட்டே இருந்தாங்கல்ல... இப்போ அழகம்மை புருஷனோட ஊரில் இருந்து வந்து இறங்கறாங்க. பார்த்தால் கூடவே இந்த மல்லிகா எனக்கு ஆரத்தி எடுங்கன்னு வந்து நிக்கறாங்க.
Advertisment
Advertisements
வீட்டில் பெரிய பூகம்பமே நடக்கும்னு பார்த்தால், பழனிச்சாமி வாத்தியார் மேல யாருக்கும் எந்த கோபமும் வரவில்லை. மனுஷர் நல்லவராத்தானே வாழ்ந்துகிட்டு இருக்கார். ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள வந்த அந்த நிமிஷத்தில் இருந்து மல்லிகா சித்தியின் ஆட்டம் ஆரம்பமாகுது. இந்த சித்தியும் சாஃப்ட்தான்.. பூர்ணா காட்டின ஆட்டம், சுதா பூர்ணா தன்னோட தங்கச்சின்னு எல்லாத்தையும் அனுசரிச்சு, அதோட அவதான் தன்னோட தங்கச்சின்னு எல்லார் கிட்டேயும் சொல்லாம மறைச்சு வச்சது... திருநா ஒரு கல்யாணத்தோட நிற்காம நிவியை இழுத்துகிட்டு போயி கல்யாணம் செய்துக்கிட்டது.. இதை எல்லாம் தட்டிக் கேட்கற மாதிரி மல்லிகா சித்தி வந்து இறங்கி இருக்காங்க.
நடுவளவனே என்று நடுப்பிள்ளை மகேஷை அழைத்து.. சித்திக்கு பாயா சாப்பிடணும் போல இருக்கு.. போயி நல்ல ஆட்டுக்காலா பார்த்து வாங்கிட்டு வான்னு சொல்ல.. ஏய்.. என்னை வேலை வாங்கறியான்னு மகேஷ் திமிறிக்கிட்டு எழுந்திரிக்கறான். மாமா நம்ம நடுவளவன் கோபப்படறப்போ எம்புட்டு அழகா இருக்க்கான்னு சந்தோஷப்படறது... சுதா ஆட்டுக்கால் பாயா ஆர்டர் பண்ணும்மான்னு மாமா சொல்ல, என்ன மாமா நீங்க வீட்டில் மூணு மருமகளுங்க இருக்காளுங்க.. வீட்டில் பாயா செய்ய சொல்லுங்க மாமான்னு சொல்றதுன்னு இந்த சித்தி அலப்பறை பண்றாங்க.
மல்லிகாவா நடிச்சு இருக்கும் காயத்ரி ரொம்பவே நல்ல நடிச்சு இருக்கார். அழகு சீரியலில் பார்த்த கதையையே பார்த்து.. அதிலும் கொஞ்ச நாளா ஆன்மிகம் ரொம்ப கலந்து பக்தி சீரியல்னு போடாத குறைதான். பார்த்து தொலையறதுன்னு ஆயிருச்சு.. இதை போல கொஞ்சம் வித்தியாசம் கிடைத்தால் ரசிக்கலாமே.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"