நடிகை ஷிவானிக்கு கல்யாணமா?
சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் நடிகையாக வலம் வரும் ஷிவானி சமீபத்தில் வெளியான வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஷிவானி தற்போது திருமண அலங்காரத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணமாக என்று கேட்டு வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியலில் நடிகை ரியா விஸ்வநாதன்
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கேரக்ரில் நடித்து பிரபலமானவர் ரியா. தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாலும். ரசிகர்கள் அவரை மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். இதனிடையே ரியா விஸ்வநாதன் அடுத்து ஜீ தமிழிழ் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த சீரியலின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
சிவாங்கிக்கு என்ன ஆச்சு?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து புகழ் பெற்றார். அதன்பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைத்து சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ள சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இதனிடையே தற்போது சிவாங்கி சிவாங்கி தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை, எழ கூட முடியவில்லை. "கடந்த இரண்டு நாட்களாக எனக்கு கோல்ட் மற்றும் ஜுரம். என்னால் எழ கூட முடியவில்லை. ஷோ பார்த்த ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு, என்னை மீண்டும் எழ வைத்துவிட்டது. உங்கள் அன்பு இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை என தெரிவித்துள்ளார்.
விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த பாக்யலட்சுமி சீரியல் நடிகை
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் இனியா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நேஹா மேனன். கதைப்படி பிளஸ் 2 படத்து வரும் இவர், தொடக்கத்தில் இருந்தே யாரையாவது காதலிப்பது பிரச்சினையில் சிக்குவதுமாக காட்டப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது டியூஷனில் ஒரு பையனுடன் பழகி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் எத்தனை பேரை காதலிப்பீங்க என்று கேட்க தொடங்கிவிட்டனர். இதற்கு பதில் கொடுத்துள்ள நேஹா படங்களில் ஸ்கூல் ட்ரஸ் போட்டு லவ் பண்ணா பாக்குறீங்க சீரியலில் பண்ண திட்ரூங்க. இப்போ இருக்கும் பிளஸ் 2 பசங்க யார் லவ் பண்ணல. இது என் உண்மையான கேரக்டர் அல்ல. நீங்கள் பார்க்கும் விஷயங்களுக்கு எங்களுக்கு சம்பளம் என்று கூறியுள்ளார்.
ராதிகாவுக்கு பாக்யா பதிலடி
கேண்டீஸ் காண்ட்ராக்ட் கிடைத்தவுடன் பாக்யாவிடம் ஆங்கிலத்தில் பேசிய ராதிகாவுக்கு பதிலடி கொடுக்க இங்கிலீஷ் கற்றுக்கொள்ள சென்றுள்ள பாக்யா தனது கேண்டீஸ் திறப்பு விழாவில் ராதிகாவிடம் ஆங்கிலத்தில் பேசி வியக்க வைத்துள்ளார். இது தொடர்பான ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil