Tamil serial news: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக பாரதி- கண்ணம்மா வலம் வருகிறது. கடந்த இரு வாரங்களாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து பெரும் எதிர்பார்ப்பை இந்த சீரியல் ஏற்படுத்தி வருகிறது என்றால் நிச்சம் மிகையாகாது. இதற்கு முக்கிய கரணம் குழந்தை ஹேமாவை குறிப்பிட்டு கூறலாம். இப்படி பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் முடிவுக்கு வர ஒரே ஒரு DNA டெஸ்ட் போதும். ஆனால் அதை வைத்து நிறைய மாதங்களாக கதையை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர வேண்டும். மற்றும் அழகான குடும்பமாக அவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசையாக உள்ளது. ஆனால், இது எப்போது நடக்கும் என்பது தெரியாத ஒன்றாகவே உள்ளது.

தற்போது இந்த சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளிவந்துள்ள நிலையில், பாரதி கண்ணம்மாவின் முந்தைய எபிசோடுகளில் ஹேமா தான் நீ பெத்த பொண்ணு என்ற உண்மையைக் கண்ணம்மாவிடம் கூறினார் சௌந்தர்யா. கண்ணம்மாவை சமையல் அம்மா என்று அழைத்து வரும் குழந்தை ஹேமாவுக்கு தான் அவருடைய உண்மை அம்மா என்பதை கண்ணம்மா கூற நெருங்கி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil