Advertisment

கசிந்த 'குடும்ப' போட்டோ… பாரதி கண்ணம்மா அடுத்த ட்விஸ்ட் இதுதானா?

Bharati and Kannamma taking a selfie in a close-up with their daughter Hema photo goes viral in social media Tamil News: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி - கண்ணம்மா தம்பதி அவர்களது குழந்தை ஹேமாவுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.

author-image
WebDesk
New Update
Tamil serial news: Bharathi, Kannamma, Hema pic goes viral; New Twist Expected Soon

Bharathi kannama Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வலம் வருகிறது. இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக உள்ள இந்த சீரியலில் அன்றாட பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் தற்போது ஒளிபரப்பாகும் எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

Advertisment

பாரதி கண்ணம்மா சீரியலில் கணவர் பாரதியை பிரிந்து வாழும் கண்ணம்மாவுக்கு லக்ஷ்மி மற்றும் ஹேமா என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இதில் ஹேமாவை பாரதியும், லக்ஷ்மியை கண்ணமாவும் வளர்த்து வருகின்றனர். கண்ணம்மாவுக்கு தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்று தெரியாது. சில வருடங்கள் கழித்து தான் அவருக்கு அந்த விஷயமே தெரிய வருகிறது.

publive-image

எனினும், தற்போதுபோது வரை இந்த உண்மை கண்ணம்மாவின் மாமியாருக்கு மட்டுமே தெரியும் என்பது போல் காட்டப்படுகிறது. இந்த நிலையில் தான், தனது அப்பா யார் என்று கேட்டுக்கொண்டிருக்கும் மகள் லக்ஷ்மியிடம் அவளது பிறந்த நாளில் அப்பா யார் என்று சொல்கிறேன் என்று கண்ணம்மா செல்லிவிடுகிறாள். இதை கேள்விப்பட்ட பாரதி எப்படியும் தன்னைத்தான் அந்த குழந்தைக்கு அப்பா என்று சொல்லப்போகிறாள் என்று கண்டுபிடித்து விடுகிறார்.

publive-image

லக்ஷ்மியின் அப்பா தான் என்று பாரதி கூறுவாரா? அல்லது கண்ணம்மா லக்ஷ்மியின் அப்பா பற்றி கூறுவாரா? இல்லை, யார் தான் இதை பிறந்த நாள் விழாவில் உடைக்கப் போகிறார்கள்? என்கிற ஆவலில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலுக்கான இந்த வார ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியது. அதில் லக்ஷ்மியிடம் அவளது அப்பா யார்? என்று பாரதி கூறுகிறார்.

Tamil serial update: bharathi tells Lakshmi who is her father in Bharathi kannama

பாரதி கண்ணம்மா சீரியல் இப்படி திருப்பங்களுடன் அரங்கேறி வரும் நிலையில், சீரியலுக்கு எண்ட் கார்டு போடப்போகிறார்கள் என்று சில ரசிர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், 'எனக்கா எண்ட் கார்டு போடுறீங்க, எனக்கு எண்ட்டே கிடையாதுடா' என்கிற வடிவேலுவின் டயலாக்கிற்கு ஏற்ப தற்போது புதிய ட்விஸ்ட் ஒன்று அரங்கேற உள்ளது.

அதற்கான க்ளுவை பாரதியும் கண்ணம்மாவும் கொடுத்துள்ளனர். சமீபத்தில் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது வருகிறது. இதனால், சீரியலில் ட்விஸ்ட் நிச்சயம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். தற்போது வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில் பாரதி - கண்ணம்மா தம்பதியின் குழந்தையான ஹேமாவும் இருக்கிறார். எனவே, சீரியலில் அடுத்தடுத்து வர உள்ள திருப்பங்களுக்கு ரசிகர்களும் தயாராகியுள்ளனர்.

publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Vijay Tv Tamil Serial News Bharathi Kannamma Serial Vijaytv Serial Bharathi Kannamma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment