Bharathi Kannamma: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாரதி கண்ணம்மா’ சீரியல் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன்.
கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகித்து, அவள் வயிற்றில் வளர்வது தனது குழந்தை இல்லை எனும் முடிவுக்கு வந்து விடுகிறான் பாரதி. ஆனால் இதை வெளியில் சொல்ல முடியாமல், கண்ணம்மாவுடன் பேசுவதை தவிர்த்து விடுகிறான். கண்ணம்மாவுக்கும், குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது எனத் தெரியாமல் குழம்பிப் போகிறார்கள்.
சூப்பர் சிங்கர் மேடையில் மலர்ந்த காதல்.. க்யூட் ஜோடி சத்யா- பார்கவி!
என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொண்டு, பிரச்னைக்கு முடிவுக் கட்ட, குடும்பமே ஒன்று கூடுகிறார்கள். அப்போது கடுகடுத்த முகத்துடன், ‘கண்ணம்மா சுமக்குறது என்னோட குழந்தை இல்ல, அது வேற ஒருத்தனோடது, இவ ஒழுக்கங்கெட்டவ’ என்கிறான் பாரதி. இதற்கு பாரதியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்ணம்மாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
இத்தனை அவமானத்துக்குப் பிறகும் இந்த வீட்டில் இருப்பதா என, வீட்டை விட்டு வெளியேறுகிறாள் கண்ணம்மா. இதனால் அதிர்ச்சியடைந்த செளந்தர்யாவுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மறுபுறம் கண்ணம்மா எங்கே சென்றாள் என கண்டுபிடிக்க வீதி வீதியாக அலைகிறான் அகில்.
ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா, நிலையான ஓரிடத்தில் தஞ்சமடையாமல், பல வாரங்களாக நடந்து கொண்டே இருக்கிறார். இதனை மையமாக வைத்து பலரும் மீம்ஸ் போட்டு, கலாய்த்து வருகிறார்கள். கைலாசத்துக்கு வேகமாக நடந்து கொண்டிருப்பது போலவும், அமெரிக்காவிற்கு சென்று விட்டது போலவும், கிரிக்கெட் விளையாடும் கிரவுண்டுக்குள் நடந்து கொண்டிருப்பது போலவும் விதவிதமாக மீம்ஸ் போட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதனால் சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகமாகி, முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள், அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். ரசிகர்களாகிய நீங்கள் கலாய்க்க வேண்டாம், எங்களை நாங்களே கலாய்த்துக் கொள்கிறோம் என களத்தில் இறங்கியிருக்கிறார்கள் பாரதி கண்ணம்மா குழுவினர்.
கமல் லுக் முதல் கேம் டாஸ்க் வரை: பிக் பாஸில் நடந்த அதிரடி மாற்றம்!
அப்போது கண்ணம்மாவின் பேக்கை திறந்துப் பார்க்கிறார், அந்த சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா. கண்ணாடி, வளையல், மேக்கப் செட், டிஸ்யூ பேப்பர்கள் போன்றவை தான் பை முழுக்க நிரம்பி இருக்கிறது. இதை பார்த்ததும் உடன் இருந்தவர்களே ஷாக் ஆகிறார்கள். இவ்வளவு நகைகளையும் எடுத்துக்கிட்டு, எங்க என்று வெண்பா இவரிடம் கலாய்த்தபடி பேட்டி எடுக்கிறார். இதையெல்லாம் வச்சி, பெரிய பணக்காரியாகி, பாரதிய பழி தீர்க்கப் போறேன்’ என அதற்கு பதிலளிக்கிறார் கண்ணம்மா.
இப்படி தங்களை தாங்களே கலாய்த்து, சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள் பாரதி கண்ணம்மா குழுவினர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”