அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?

Bigboss Celebrity Archana : பிக்பாஷ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை அர்ச்சனா வீட்டு நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Bigboss Archana Home Festival : சன்டியில் பிரபலமான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அர்ச்சனா, அதன்பிறகு கலைஞர் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல சேனல்களில் விஜேவாக பணியாற்றி புகழ்பெற்ற இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஷ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட இவர் மேலும் பிரபலமடைந்தார். தொடர்ந்து  77-வது நாளில் இவர் வெளியேற்றப்பட்டர்.

இதனைத் தொடர்ந்து தற்போது அர்ச்சனா வீட்டு விஷேசத்தில் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துக் கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஷ் போட்டியாளராக ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, கேபி, நிஷா, சோம், அனிதா என பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

இந்த நிகழ்வில் பிக்பாஷ் அனிதாவின் கணவர் பிரபா, நிஷாவுடனும், குக் வித் கோமாளி தீபாவுடனும் இணைந்து ஜாலியாக நடனமாடிய வீடியோவை அனிதா, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ‘அனிதா சம்பத் கணவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்கள்’ என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியிட்ட சிறிது நேரத்தில் 50,000 பார்வையாளர்களை கடந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news bigboss archana home festival bigboss stars

Next Story
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express