sun tv Chandralekha Serial, tamil tv serial, tamil tv serial news, தமிழ் சீரியல், சீரியல் செய்திகள், சின்னத்திரை
Tamil Serial News : சன் டிவியின் சந்திரலேகா சீரியல் கடந்த 6 வருஷத்துக்கு மேல மதிய நேரத்து சீரியலா ஒளிபரப்பாகி வருது. மதிய நேரத்தின் ரேட்டிங்கில் நல்ல இடத்தில் உள்ளது சந்திரலேகா. சந்திராவும் லேகாவும் மாமா பொண்ணு அத்தை பொண்ணுங்க.. லேகா பணக்கார அம்மாவிடம் சந்திரா மீது ஒரு குரோத மனப்பான்மையில் வளர்ந்து இப்போ திருந்தி இருக்கா. என்ன கொடுத்த விலைதான் அதிகம்.. கணவன் சபரியை சரண்யாவுக்கு தரை வர்த்த மாதிரி ஆகிப்போச்சு.
ஆனால், அப்போதுதான் தனது வயிற்றில் சபரியின் குழந்தை வளருதுன்னு லேகாவுக்கு தெரியுது. வயிற்றில் வளர்வது புருஷன் சபரி குழந்தைதான்னு அவனிடம் நிரூபிப்பதற்குள் லேகாவுக்கு போதும் என்றாகிவிட்டது. ஆனால், சபரி முற்றிலுமாக லேகாவின் பக்கமே சாய்ந்து அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தைக்காக உருகி உருகி பாசம் காண்பிக்கறான்.
என்னதான் மனம் ஒவ்வாமல் விவாகரத்து பெற்று சரண்யா கழுத்தில் தாலி கட்டிவிட்டாலும், குழந்தை என்று வரும்போது சபரி ஆடிப்போகிறான். தனது குழந்தை அப்பா இருந்தும், இல்லை என்று வளரக் கூடாது என்கிற எண்ணம் சபரிக்கு. இதனால் லேகாவிடம் அவ்வப்போது மனைவி சரண்யாவுக்குத் தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கான். கடைசியாக குலதெய்வம் கோயிலில் வயிற்றில் வளரும் குழந்தைக்காக சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கிளம்பும் போது சரண்யா தானும் வருவதாக அடம் பிடிக்கிறாள்.
Advertisment
Advertisements
சரின்னு சம்மதிச்சு, இப்போ லேகாவுடன் சபரி உட்கார்ந்து பூஜை செய்ய வேண்டும். அதே மாதிரி சரண்யாவுடன் சபரி சேர்ந்து உட்கார்ந்து பூஜை செய்ய வேண்டும். என்ன செய்வான்? அம்மா நான் கோயிலுக்கு போயி ரெடி பன்றேன்னு முதலில் கிளம்பி போயிட்டாங்க. சபரி தவிக்கிறான். லேகா துடிக்கிறாள். பூஜை நடந்தாகணுமே... ஐயர்தான் இப்பபோதைக்கு ஆலோசகர்.. அவர் என்ன சொல்லி ரெண்டு பேருடன் சபரியை உட்கார வச்சு பூஜை செய்யப் போகிறார்?
நல்ல நேரம் முடிஞ்சு போச்சு.. இவ்ளோ லேட்டா வறீங்களேம்மான்னு சரண்யா முன்னிலையில் கேட்ட ஐயர்... கொஞ்ச நேரம் இருங்க நல்ல நேரம் வரும், அப்போ பூஜை செய்யலாம்னு சொல்லிட்டு, சபரியை மட்டும் கூப்பிட்டு லேகாவுடன் உட்கார வச்சு பூஜைக்கு தயாராகிறார். இதெல்லாம் வீரா படத்துல நாம பார்த்ததுதான்... என்ன அதுல சூப்பர் ஸ்டார் காமெடி பண்ணி இருப்பார். இது பூரா சென்டிமென்ட் காட்சிங்க. என்ன இருந்தாலும் இந்த காலத்துப் பசங்க. வயிற்றில் இருக்கும் குழந்தைகாக என்று தங்களது ஈகோவை ஒதுக்கி வச்சு ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு போறது நல்ல மெசேஜ்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”